பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data definition

382

data design


வேறுபடும். ஆனால், அனைத்து முறைகளிலும் சில கூறுகள் மாறிலியின் பெயர், தரவு இனம், தொடக்க மதிப்பு, உருவளவு ஆகியவை பொதுவானவை.

C, C++, Java char name{15] int age;

                     double pay;

paScal name : string[15];

                    age     : integer; 
                    pay     : real,

data definition : தரவு வரையறை தரவு விளக்கம் : அறிக்கை ஒன்றுக்கான நிரல் தொகுப்புகளை வரையறுக்கும்பொழுது, அதில் அளவு, வகை, களம் ஆகியவற்றின் தன்மை, இடம் பெற்றிருக்க வேண்டும்.

data definition language : தரவு விளக்க மொழி : தரவு அடிப்படை நிர்வாகி ஒருவர், தரவு அடிப்படைச் சூழலில், தரவுவை உருவாக்கவும், சேமிக்கவும், பராமரிக்கவும் கையாளும் மொழி. இதனை, தரவு மொழி என்றும் கூறுவார்கள்.

data definition statement : தரவு வரையறை அறிக்கை : ஒரு கோப்பு பற்றிய தரவுகளை அளிக்கும் ஒரு பணிக் கட்டுப்பாட்டு மொழி அறிக்கை.

data description language (DDL) : தரவு விவரிப்பு மொழி (டிடிஎல்)  : தரவு அடிப்படைச் சூழலில், தரவு அடிப்படை நிர்வாக முறையில், தரவு விவரணையில் சேமிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் மொழி. இதனை தரவு விளக்கமொழி என்றும் அழைப்பதுண்டு.

data description library : தரவு விவரிப்பு நூலகம் : ஒரு தரவு ஆதார மேலாண்மைப் பொறியமைவில், பல்வேறுவகைத் தரவு குறிப்புகளிடையிலான இடைத் தொதாடர்புகளுடன் சேர்த்துச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல்வேறுவகைத் தரவுகள், விவரங்களின் ஒரு பதிவேடு.

data description standard : தரவு விவரிப்புத் செந்தரம்.

data descriptor : தரவு விவரிப்பி : ஒர் இணைப்புமொழிச் செயல் முறையில், முதன்மை நினைவுப் பதிப்பியில் நிலையான அல்லது காப்பிடச் சேமிப்பு அமைவிடங்களை வரையறுத்துக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறைப்படுத்தும் அறிக்கை.

data design : தரவு வடிவமைப்பு : ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது,