பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data dump

383

data dictionary


ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், கோப்புகள் மற்றும் தரவுத் தளத்திற்கான ஒருங்கிணைப்பு விதிமுறைகள் ஆகியவற்றை அளிக்கிறது.

data dictionary : தரவு அகர முதலி, தரவு அகராதி : ஒரு தரவு அடிப்படை நிர்வாக முறையில் பயன்படுத்தப்படும் கோப்புகள், களங்கள் மற்றும் மாறக்கூடியவற்றை உள்ளடக்கியது. தரவு அகரமுதலி, பயன்படுத்துவோருக்கு எவற்றுடன் தாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதையும், அவை எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதையும் நினைவுபடுத்த உதவுகிறது. குறிப்பாக பெரிய எண்ணிக்கையிலான இணைக்கப்பட்ட நடைமுறைகளை அல்லது நிரல் தொகுப்புகளை தரவு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்பொழுது, எழுதும் பொழுது உதவியாக உள்ளது.

data diddling : தரவு மாற்றியமைத்தல் : தரவுகளை மாற்றும் உத்தி : கணினிக் கோப்பு ஒன்றிற்குள் சேர்க்கும் முன்பு அதனை எளிதில் பெற முடியாத படி தரவுகளை மாற்றும் உத்தி.

data directory : தரவு அடைவு : தரவு அட்டவணை : தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும்.

data directory / data dictionary : தரவு அடைவு/தரவு அகரமுதலி : தரவு அம்சங்களை ஒழுங்கு முறைப்படுத்துதல். இம்முறையில் தரவு அட்டவணை, தரவுப்பொருளுணர்த்தும் அட்டவணை, தரவு அகரமுதலி முதலியவற்றின் பண்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தரவுகளின் அம்சங்களை விவரிப்பதோடு அவற்றின் இடத்தையும் கண்டறிய முடியும்.

data division : தரவு பகுதி : தரவு பிரிவு : கோபால் நிரல் தொகுப்பின் நான்கு முக்கிய பகுதிகளில் மூன்றாவது பகுதி.

data driven processing : தரவு உந்து செயலாக்கம் : தரவு செயலாக்க முறைகளுள் ஒன்று. செயலி (Processor) அல்லது நிரல் (Programme), வரிசைமுறையிலான செயல்பாடுகளில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், தரவின் (data) வருகைக்காகக் கட்டாயமாகக் காத்திருக்க வேண்டிய நிலை.

data dump : தரவு சேமிப்பு : தொல்லை நீக்கும் அம்சம். அச்சடிப்பி, தரவு சேமிப்புத் தக