பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data field

386

data flow


(bit stream) வடிவிலான, தகவலையும், பட உருவங்களையும் அனுப்பவோ பெறவோ பயன்படும் இனக்கி.

data field : தரவுக் களம் : தரவூ புலம் : தரவுகளை வகைப்படுத்தும் வடிவத்தில் ஒரு உயர் பகுதி அல்லது அடுத்தடுத்த உயர்பகுதிகள் அல்லது குறிப்பிட்ட தரவு அம்சத்தைப் பதிவு செய்வதற்கான துளையிடப் பட்ட அட்டை, 2. தரவு ஆவணம் ஒன்றின் பகுதி.

data field masking : தரவு மறைப்பு : தரவுகளுக்கு மூடியிடல் : தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 07/12/86. தொலைபேசி எண்களைக் குறிப்பிட பிறை அடைப்புக்குறிகள், கிடைக்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. (999) 999-9999, இதே போன்ற குறியீடுகள் பகுதி எண்களைக் குறிக்கவோ, எழுத்துக் கோவையின் பரப்புத்திறனை மேம்படுத்தவோ கையாளப்படுகின்றன. இத்தகைய மூடிகளை கணினியால் செருக இயலும். அவற்றை இயக்குவோர் தானாகச் சேர்க்கவேண்டிய தில்லை. தேதிக்கான பகுதியில் 07. 1286 என்ற எண்களை மட்டும் பதிவு செய்தால்போதும். கணினி ஆணைத்தொகுப்பு சாய் கோடு களைத் தானாகச் சேர்த்து விடும். இம்முறை தரவுப் பதிவை எளிதாக்குகிறது. பணிகளைத் தரப்படுத்துகிறது. சில நிரலாக்கத் தொடர்கள் மூடியிடும் பணியை முறையாகச் செய்கின்றன.

data file : தரவுக் கோப்பு : தொடர்புடைய தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுகின்றன. இதனை உரைக் கோப்பு என்றும் கூறுவார்கள்.

data file processing : தரவுக் கோப்புச் செயலாக்கம் : தரவுக் கோப்பு வகைப்படுத்துதல் தேதிக்கோப்புகள் நடைமுறைத் தரவுகளைப் பிரதிபலிக்கிற வகையில் ஆவணங்களைச் சேகரித்தல், மாற்றுதல், நீக்குதல் மூலம் நாளது தேதிக்கு இணங்க மேம்படுத்துதல்.

data flow : தரவு பாய்வு : தரவு ஒழுகை : பதின்ம முறை தொடர்பான வேர்ச்சொல் அல்லது தரவுகளின் கிடைநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகளைச் செய்யும் எந்திரங்கள்.