பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data flow analysis

387

data general corporation


data flow analysis : தரவு பாய்வுப் பகுப்பாய்வு : முறைப்படுத்தும் நடவடிக்கை களிடையே தரவுகளின் ஒட்டம் பற்றிய ஆய்வு.

data flow diagram : தரவுப் பாய்வு வரைபடம் : ஒரு முறைமை வழியாக தரவுகளின் பாய்வை பிரதி நிதித்துவப்படுத்தும் முறைமை யைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிற வரைபட ஆய்வு முறைமை மற்றும் வரைபடக் கருவி.

data fork : தரவுக் கவைமுனை : தரவுகளைக் கொண்ட ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் பகுதி. எடுத்துக்காட்டு : ஒரு மிகை அட்டை அடுக்கில், வாசகம், வரைகலை, மிகைப் பேச்சுப் படிகள் ஆகியவை தரவு கவை முனையில் அமைந்திருக் கின்றன. சேமக்கலங்கள், ஒலிக் கட்டுப்பாட்டுத் தரவுகள், புறச்செயற்பணிகள் ஆகியவை ஆதாரக் கவை முனையில் அமைந்திருக்கின்றன.

data form : தரவுப் படிவம்.

data format : தரவு படிவம் : கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அக்கட்டமைப்பையே தரவு வடிவம் என்கிறோம்.

data formatting statements : தரவு வடிவாக்கக் கட்டளைகள் : தரவைப் படிக்கிறபோது அல்லது வெளிப்படுத்துகிறபோது, தரவின் வடிவத்தை வரையறுக்கிற செயல்முறைப்படுத்தும் மொழிகளின் கட்டளைத் தொடர்கள்.

data frame : தரவுத் தொகுதி : தரவுச் சட்டம், தரவு பொதி : தரவு பொட்டலம் : கணினிப் பிணையங்களில் ஒற்றைத் தொகுதியாக அனுப்பப்படுகின்ற ஒரு தரவுப் பொதி பிணையங்களின் தரவுத் தொடுப்பு அடுக்கு (Data Link Layer) தரவுச் சட்டத்தை நிர்ணயம் செய்கின்றது. பிணையக் கணுக்கள் (Network Nodes) இரண்டுக்கிடையே இணைக்கும் கம்பிகளில்தான் தரவுச் சட்டம் நிலவுகிறது. கணினிக்குள் நுழைந்த பிறகு சட்டம், பொதி என்ற பரிமாணத்தை இழக்கிறது.

data gathering : தரவு சேகரிப்பு : உள் அல்லது வெளி ஆதாரங் களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கும் பணி.

data general corporation : தரவு பொதுக் கார்ப்பரேஷன் : குறுங்-