பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data link level

390

data manipulation


போக்குவரத்து அடுக்குகள் கீழ் நிலையில் இந்த அடுக்கு அமைந்துள்ளது.

data link level : தரவுத் தொடுப்புநிலை : தரவு இணைப்புப் படித்தளம்.

data logging : தரவாக்கம் : தரவுபதிவு : ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்டிடம் எங்குமுள்ள பல்வேறு அறைகளிலுள்ள வெப்ப உணர்விகளிலிருந்து வரும் தரவுகளை திரும்பத் திரும்பப் பதிவு செய்கிறது. இந்தத் தரவுகள் வெப்பமூட்டுவதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

data management : தரவு நிர்வாகம் : தரவு மேலாண்மை : கவன் பொருள் அமல்படுத்துதல், தரவு சேமிப்பு மரபுகள், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். 2. தரவுகளை முறைப்படுத்துதல், அட்டவணைப்படுத்துதல், இருக்குமிடம் அறிதல், பெறுதல், சேமித்தல், மற்றும் பராமரித்தல் ஆகிய பெரும் பணிகளைக் கொண்ட இயக்க முறைமை ஒன்றின் முக்கியப் பணிகள்.

data management system : தரவு மேலாண்மை அமைப்பு : தரவு நிர்வாக முறைமை : 1. தரவு முறைமைகளுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் நிரல் தொகுப்பு நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தரவு சேமிப்பு ஒன்றினை ஏற்படுத்தவும் பராமரிக்கவும், தரவு உள்ளிடுகிற, ஒருங்கிணைக்கிற பொறுப்பினை வழங்கும் முறைமை.

data manager : தரவு செயலாக்க மேலாளர்.

data manipulation : தரவுகளில் திருத்தம் : மொழி நிரல்கள் மூலம் தரவு அடிப்படை அல்லது தரவுக் கோப்பு ஒன்றுடன் தரவுகளைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை.

data manipulation & analysis : தரவு கையாள்தல் மற்றும் பகுப்பாய்வு.

data manipulation instruction : தரவு கையாள்தல் ஆணை.