பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data manipulation language

391

data model


data manipulation language : DML : தரவு பராமரிப்பு மொழி : தரவுகளைத் திருத்தும் மொழி : ஆங்கில மொழி ஆணைகளைப் பயன்படுத்தி, கணினி ஒன்றின் தரவு சேமிப்பு ஒன்றினை அணுகுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்குப் பயனாளர் ஒரு வரை அனுமதிக்கும் மொழி.

data mart : தரவுக் குறுங் கிடங்கு : மிகப்பரந்த அளவிலான தரவு சேமிப்பு, தரவு தரவு கிடங்கு (Data Warehouse) எனப்படுகிறது. தரவுக் கிடங்கின் ஒரு சுருங்கிய வடிவம் தரவுக் குறுங்கிடங்கு எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவின் தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் தரவுகளைக் கொண்டுள்ள கிடங்கு.

data matrix : தரவுப் படிமம் : தரவு அச்சுவார்ப்புரு : தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை.

data medium : தரவு ஊடகம் : பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தரவுகளைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு : காந்தவட்டு அல்லது காந்த நாடா.

data migration : தரவு இடப்பெயர்வு : 1. தரவுத் தளம் போன்ற ஒரு சேமிப்பிடத்திலிருந்து இன்னொன்றுக்கு தரவைப் பெயர்த்தெழுதும் செயல்முறை. பெரும்பாலும் இத்தகைய இடப்பெயர்வு தானாக இயக்கப்படும் நிரல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய இடப்பெயர்வில் தரவு பெரும்பாலும் ஒருவகைக் கணினி அமைப்பிலிருந்து வேறுவகைக் கணினியியல் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். 2. மீத்திறன் கணினிப் (Super Computer) பயன்பாடுகளில், அகல் நிலை (offline) -யில் ஏராளமான தரவு களை பதிவுசெய்து அவற்றை வட்டுக் கோப்புகளாய் நிகழ் நிலை (online) தகவலாய்க் கிடைக்கச் செய்யும் முறை தரவு இடப்பெயர்வு எனப்படும்.

data mining : தரவுச் சுரங்கம் : தரவு அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அது போன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளி நுட்பம் மூலமாகக் கண்டறியும் செயல்முறை.

data model : தரவு மாதிரி : தரவு படிமம் : தரவு வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நடவடிக்கைகளை விளக்குகிற