பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394


பெறவும் மனிதர்களின் நிரல்களுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தவும் பின்னர் அதன் முடிவுகளையும் வழங்கத் தேவையான கருவிகளைக் கொண்ட கணினி மையம் தரவு தயாரிப்பு மையம் போன்றது. இதனை நடவடிக்கை மையம் என்றும் கூறுவதுண்டு.

data processing, commercial : வணிகத் தரவுச் செயலாக்கம்.

data processing curriculum : தரவுத் தயாரிப்புக் கல்வி : பள்ளி அல்லது கல்லூரி ஒன்று வழக்கமாக வழங்கும் வகுப்புக் கல்வி. இக்கல்வி பயன்படுநிரல் தொகுப்புகளைக் கையாளவும், முறைமை ஆய்வாளராகப் பணிபுரியவும், உள்ளிடு நிலையிலான பணிகளைச் செய்யவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனம்.

data processing cycle : தரவுத் தயாரிப்புச் சுழல் : தரவுச் செயலாக்கச் சுழல் உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங் கிணைந்த பணிகள்.

data processing department : தரவுச் செயலாக்கத் துறை.

data processing, electronic : மின்னணு தரவுச் செயலாக்கம்.

data processing management : தரவுத் தயாரிப்பு நிர்வாகம் : தரவுத் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான கருவிகளை நிர்வகித்தல், இந் நிர்வாகத்தில் திட்டமிடல், கட்டுப்பாடு, செயல்பாடு ஆகியன. ஏற்கப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில் மற்ற நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் திறனே இதற்கும் தேவைப்படுகிறது.

data processing manager : தரவுச் செயலாக்க மேலாளர்.

data processing system : தரவுத் தயாரிப்பு முறைமை : தரவுச் செயலாக்க அமைப்பு : தரவுத் தயாரிப்பு இணைப்பு, வன்பொருள் மென்பொருள், உழைப் பவர், தரவுகளை ஏற்றல், திட்டப்படி அதனைத் தயாரித்தல், மற்றும் விரும்பும் முடிவுகளைத் தயாரிப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு.

data processing technology : தரவுத் தயாரிப்பு தொழில் நுணுக்கம் : தரவுச் செயலாக்கத் தொழில் நுட்பம் தரவுகளைக் கையாளு வதற்கான அறிவியல்.

data processor : தரவுத தயாரிப்புக் கருவி : தரவுகளின் மீதான செயல்பாட்டை ஆற்றக் கூடிய கருவி. எடுத்துக்காட்டாக மேசைக் கணக்கிடு கருவி அல்லது எண்ணியல் கணினி.