பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

access permission

39

access speed


access permission : அணுகல் அனுமதி : அணுகுவதற்குரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டு ஒரு நிரலாக்கத் தொடரை இயக்க அனுமதித்தல்.

access points : அணுகு முனைகள்; இயக்க முனைகள்.

access privileges : அணுகு சலுகைகள் : ஒரு பிணையத்தில் அல்லது ஒரு கோப்பு வழங்கலில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் வளங்களைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள். வழங்கல் கணினியை அணுகுதல், ஒரு கோப்பகத்தின் உள்ளடக்கத்தைப் பார்வையிடல், ஒரு கோப்பினைத் திறந்து பார்த்தல், அதனைப் பிறருக்கு அனுப்புதல், ஒரு கோப்பினை அல்லது கோப்பகத்தை உருவாக்குதல், திருத்தியமைத்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகள் இந்தச் சலுகைகளில் அடங்கும். முறைமை நிர்வாகி ஒரு பயனாளருக்கு இச்சலுகைகளை வழங்கலாம் அல்லது மறுக்கலாம். நிர்வாகிக்கு இத்தகைய உரிமை இருப்பதால் தகவல் பாதுகாக்கப்படுகிறது; இரகசியத் தகவலின் மறைதன்மை காப்பாற்றப்படுகிறது. வட்டிலுள்ள சேமிப்பிடங்கள் போன்ற வளங்களை முறைப்படி பிரித்தளிக்க முடிகிறது.

access protocol : அணுகு நெறிமுறை : தடங்களில் சமிக்கைகளை அனுப்புவதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் போக்குவரத்து விதிகள். எதைப் பயன்படுத்தினாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இல்லையேல், தரவு தவறாகும் அல்லது தொலைந்து போகும்.

access provider : அணுகல் வழங்கி.

access, random : குறிப்பின்றி அணுகல்.

access rights : அணுகு உரிமைகள் : ஒரு கோப்பு அல்லது கோப்பகம் அல்லது ஒரு முறைமையைப் பார்க்க, உள் நுழைய அல்லது மாற்றம் செய்வதற்கான அனுமதி.

access, serial : தொடரியல் அணுகல்.

access series அணுகு தொடர்.

access specifier : அணுகல் வரையறுப்பி.

access speed : அணுகு வேகம் : முதன்மை அல்லது துணை நிலை