பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data transfer operations

399

data verification


data transfer operations : தரவு செலுத்துச் செயல்முறைகள் : தரவு அனுப்புகைச் செயல்கள் : தரவுத் தொடர்பு வழியிலோ அல்லது கணினி ஒன்றின் சேமிப்புப் பகுதியிலோ, ஒரிடத் தில் உள்ளதை பிரதி செய்து மற்றொரு இடத்திற்கு மாற்றுதல்.

data transparency : தரவு மறைப்பின்மை : தரவுகள் எந்த அமைவிடத்தில் இருந்தாலும் அல்லது அது எதற்குப் பயன்படுவதாக இருந்தாலும், அதனை எளிதில் அணுகுவதற்கான திறம்பாடு.

data transmission : தரவு அனுபுகை : தரவு செலுத்துகை முறைமை ஒன்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, தரவுகளை அனுப்புதல்.

data transmission, asynchoronous : நேரச்சீரற்ற தரவு அனுப்பீடு.

data transmission channels : தரவு அனுப்பீட்டு வழிகள் : தரவு அனுப்பீட்டு வழிகள் அல்லது 'பெருவழிகள் என்பவை, ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்குத் தரவுகளைக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. இவை குறும அலைநீளம், அகல அலைநீளம், குரல் அலைநீளம் என மூன்று வகைப்படும்.

data transfer rate : தரவு செலுத்து வீதம் : தரவு அனுப்புகை வீதம் : கணினியின் முக்கிய நினைவிடத்திலிருந்து வட்டுக்கு அல்லது ஒரு கணினியின் நினைவிடத்திலிருந்து மற்றொரு கணினியின் நினை விடத்துக்குத் தரவுகளை அனுப்பும் வேகவீதம்.

data type : தரவு வகை : தரவு மாதிரி.

data validation : தரவு கள வரையறை : தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரவு, களங்கள் சோதனையிடப் படலாம்.

data value : தரவு மதிப்பளவுகள் : தரவு மதிப்பீடு தரவு வகைகளின் பிரதிநிதியாகப் பயன் டும் குறியீடுகளின் தொடர்.

data verification : தரவு சரிபார்த்தல் : தரவு ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தரவுகள் சரியான வகையைச் சார்ந்ததா, சரியான நீளமுடையதா

என்பனவற்றைச் சரி பார்த்தல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக,