பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

daughter board

401

DCA


daughter board : துணைப் பலகை : தாய்ப் பலகையுடன் பொருத்தப்படும் இணைப்புப் பலகை.

DB : டிபி : டெசிபல் (Decibal ) என்பதன் குறும்பெயர். ஒரு செய்தித் தொடர்புக் கம்பியில் அனுப்பீட்டு இழப்பீடுகளை மடக்கை முறையில் அளவிடுவதற்கான அலகு.

DB/DC (Data Base / Data Communications) : தடவு தளம் / தரவுத் தொடர்புகள் : தரவுத் தளப்பணிகளையும், தரவு தொடர்புப் பணிகளையும் ஆற்றுகிற மென்பொருள்களைக் குறிக்கும் சொல்.

DB2 : டிபி2 (தரவுத் தளம்-2)  : ஒரு பெரிய முதன்மைப் பொறியமைவில் இயங்குகிற ஐபிஎம் (IBM) முதன்மைப் பொறியமைவிலிருந்து உருவான தரவுத் தள மேலாண்மைப் பொறியமைவு (DBMS). இது, ஐபிஎம்-இன் பெருந்தரவு தள விளை பொருளாகியுள்ள முழுமையான டிபிஎம்எஸ் பொறியமைவு. இது கட்டமைவு வினவு மொழி (SQL) இடைமுகப்பு.

DB-25-connector : டிபி-25 இணைப்பி : 25 செருகிகளை அல்லது 25 செருகு இடங்களைக் கொண்ட இணைப்பி, பெரும்பாலும் ஆர்எஸ்-232 சி முகவிடை இணைப்பில் பயன்படுத்தப்படுகிறது.

D. base file : தரவுத் தளக்கோப்பு.

D. base programme : தரவுத் தளச் செயல்முறை.

DBMS : டிபிஎம்எஸ் : Database Management System என்பதன் குறும்பெயர். இதற்குத் தரவுத் தள நிர்வாக முறைமை என்பது பொருளாகும்.

DC : டிசி : 1. தரவு மாற்றம் (Data Convertor). 2. வடிவமாற்றம் (Design Change). 3. மெண்ணியல் கணினி (Digital Computer). 4. நேர்மின் (Direct Current). 5. நேர்வட்டம் (Direct Circle). 6. பட வெளியீட்டு விசைப் பலகை (Display Console). ஆகியவற்றின் குறும்பெயர்.

DCA : டிசிஏ : ஆவண உள்ளடக்கக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architecture - SNA) பயன்படுத்தப்பட்ட, ஆவணங்களின் வடிவாக்கம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை இது குறிக்கிறது. வெவ்வேறு வகையான கணினிகளுக்




26