பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DDL

404

deadly embrace


என்னும் செயல்முறை மூலம் இத்தகைய தரவுப் பரிமாற்றம் நடைபெற்றது. விண்டோஸ் 95/ 98/என்டி ஆகியவற்றில் ஒஎல் இ- யுடன் ஆக்டிவ்எக்ஸ் என்னும் தொழில்நுட்பமும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

DDL : டிடிஎல் : தரவு விவரிப்பு மொழி : Data Definition Language என்பதன் குறும்பெயர். தரவு அடிப்படை ஒன்றில் தரவு வடிவங்களை வெளியிடுவதற்கான மொழி.

de : டிஇ : ஜெர்மனி நாட்டில் இயங்கும் இணைய தளத்தைக் குறிக்கும் புவிசார் பெருங்களப் பெயர்.

dead halt : முழு நிறுத்தம் : இச்சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட மையத்துக்கு முறைமையினால் திரும்ப வரமுடிவதில்லை.

dead key : வெற்று விசை : நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக விசைப் பலகையில் ஒர் எழுத்து விசையை அழுத்தினால் அவ்வெழுத்து திரையில் பதிவதுடன், சுட்டுக்குறி அடுத்த இடத்துக்கு நகரும். ஆனால், பெரும்பாலும் வெற்று விசையை அழுத்தும்போது, அடுத்த எழுத்துக்கு நகர்வதில்லை. திரையில் எவ்வித எழுத்தும் தோன்றுவதில்லை. தமிழில் தட்டச்சு செய்யும் போது ஒரு மெய்யெழுத்தைப் பதிய முதலில் புள்ளியையும் பின் உயிர்மெய் எழுத்தையும் அழுத்தும் முறையில் புள்ளிக்குரிய விசை நகரா விசையாகச் செயல்படும். புள்ளி வைத்தபின் அதன் கீழேயே உயிர் மெய்யைப் போடவேண்டுமல்லவா?

dead letter box : சேராக் கடிதப் பெட்டி : செய்திகளின் நடை முறைக்கான முறைமைகளில் வழங்கமுடியாத செய்திகளைக் கைப்பற்றுவதற்கான கோப்பு.

dead lock : முட்டுக்கட்டை : முடக்க நிலை : தேக்க நிலை : ஆதாரம் ஒன்றிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும், தீர்வு காணப்படாத முட்டுக்கட்டை.

deadly embrace : தேக்கநிலை மேவல் : ஒரு செய்முறையில் இரு ஆக்கக்கூறுகள் ஒன்றின் பதிலை ஒன்று எதிர்பார்த்து ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு : ஒர் இணையத் தில், ஒரு பயனாளர் 'A' என்ற