பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/408

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
decimal
decimal to binary
407

யிலான குரல் முனைப்பினைக் முடிகிறது. சந்தடி மிகுந்த ஒரு தொழிற்சாலையில் 90 டிபி ஓசை எழுகிறது. இடி முழக்கத்தில் 110 டிபி ஓசை உண்டாகிறது. 120 டிபி அளவுக்கு மேற்பட்ட ஒசையினால் காது வலி உண்டாகும்.

decimal : பதின்மம் தசமம் : பதின்மானம் பதின்மக் குறிமானத்தில் பயன்படுத்தப்படும் 0 முதல் 9 வரையிலான இலக்கம். பதின்மக் குறிமானத்தைக் (ஆதாரம் 10) கையாளும் போது, '0' முதல் 9 வரையிலான (பத்துக்கு ஒன்று குறைவு) இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போன்று 6 -ஐ ஆதாரமாகக் கொண்ட குறிமானத்தில் '0' முதல் 5 முதல் வரையிலான (ஆறைவிட ஒன்று குறைந்த) எண்களையும், ஈரிலக்கக் குறி மானத்தில் (ஆதாரம் 1) 0 முதல் 1 வரைமட்டும் பயன்படுத்துகிறோம்.

decimal code : பதின்மக் குறியீடு : தசமக் குறியீடு : தனியாக வேறொரு எண்முறைமையில் பதின்ம எண்களைக் குறிப்பிடும் முறை.

decimal digit : பதின்ம இலக்கம் : தசம இலக்கம் : பதின்ம எண் முறைமையில் உள்ள ஒரு எண். பதின்மமுறையின் அடிப்படை எண் 10, கீழ்க்காணும் குறியீடு கள் பயன்படுத்தப்படுகின்றன. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9.

decimal number : பதின்ம எண் , தசம எண் : பொதுவாக ஒற்றை இலக்கத்துக்கு மேற்பட்ட எண், அதன் அளவு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்களால் குறிக்கப்படுகிறது.

decimal numbering : பதின்ம இலக்கமிடல் : எண்ணுவதற்கு அடிப்படையாக ஒரு 10 இலக்கச் சுழற்சியைப் பயன் படுத்துகிற எண்மானமுறை. இதில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள் 0 1 2 3 4 5 6 7 8 9.

decimal point : பதின்மப் புள்ளி : தசமப்புள்ளி பதின்மப்புள்ளி என்பது எண்ணும் பதின்ம எண்களும் கலந்த ஒன்றில் முழு எண்களை பதின்ம எண்களிலிருந்து பிரிக்கிறது. 711. 12 என்ற பதின்ம எண்ணில் உள்ள 741-ஐயும் 12-ஐயும் பிரிக்கிறது.

decimal system : பதின்ம முறை : தசம முறை : அடிப்படை 10 எனக் கொள்ளும் எண் முறை மையாகும்.

decimal to binary conversion : பதின்ம-இருமமுறை-மாற்றம் :