பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decimal to hexadecimal

408

decision making


பதின்ம முறைமையிலிருந்து இரட்டை இலக்க எண்களாக மாற்றுதல் பதின்ம முறைமையில் எழுதப்பட்ட எண்களை இருமமுறைக்குச் சமமான எண்களாக மாற்றுதல்.

4410 = 1 × 24 + 0 x 23 - 1 x 22 + 1 x 21 + 0 x 20 = 1011002,

decimal to hexadecimal conversion : பதின்ம முறையிலிருந்து பதினாறெண் முறைக்கு மாற்றுதல் : 10-ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு எண்ணை 16-ஐ அடிப்படையாகக் கொண்ட எண் முறைமை யில் எழுதுதல்.

decimal to octal conversion : பதின்ம-எண்ம முறை மாற்றம் : பதின்ம முறையிலிருந்து எட்டை அடிப்படையாகக் கொண்ட முறைக்கு மாற்றுதல் : பத்தை அடிப்படையாகக் கொண்ட பதின்ம முறையில் எழுதப்பட்ட எண் ஒன்றை எட்டை அடிப்படையாகக் கொண்ட முறையில் சமமான எண்ணுக்கு மாற்றுதல்.

decision : தீர்வு : நினைவகத்தில் உள்ள தரவுகளுக்கிடையிலும், பதிவேட்டில் உள்ள தரவுகளுக்கிடையிலும் ஒரு வகையான உறவுமுறை உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் கணினிச் செயல். மாற்றுவழிகளுக்கு மாற்றுவதற்கான செயல், எதிர் கால நடவடிக்கையை உறுதி செய்தல்.

decision box : தீர்வுப் பேழை : தொடர் வரிசை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் சாய் சதுர வடிவக் குறியீடு. இது, ஒரு முடிவு தேவைப்படும்போது செயல்முறையில் ஒரு புள்ளி யைச் சுட்டிக் காட்டுகிறது.




decision instruction : முடிவு காணூம் கட்டளை : நிரல் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் கட்டளை. எடுத்துக் காட்டு : நிபந்தனைத் தாவல் ஆணை.

decision, logical : தருக்கத் தீர்வு : தருக்கமுறை முடிவு.

decision making : தீர்வு செய்தல் : பல விருப்பத் தேர்வுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், மனிதனும் எந்திரமும் எடுக்கும் முடிவுகளில் முறையான