பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dedicated device

412

de facto standard


பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினி வடிவத்தில் மட்டும் இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறப்புப் பயன் கணினியுடன் ஒப்பிடவும்.

dedicated device : தனிப்பயன் கருவி : ஒதுக்கப்பட்ட கருவி : ஒரு குறிப்பிட்ட வேலைக்கென வடிவமைக்கப்பட்ட கருவி. மற்ற பணிகளுக்காக அதில் ஆணையிட முடியாது.

dedicated lines : தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள் : ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலை பேசி இணைப்புகள் : தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குழு வினருக்கோ தொலைத்தரவு தொடர்புக்காக தனிப்பட்ட முறையில் குத்தகை முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகள். இத்தகைய இணைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்படுகிறது. பொதுவான இணைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு என்று கனக்கிட்டுக் கட்டணம் வசூலிப்பது போல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை.

dedicated service : அர்ப் பணிப்புப் பணி : ஒரு நோக்கப் பணி : மற்றப் பயன்படுத்துவோர் அல்லது அமைவனங்கள் பகிர்ந்து கொள்ளாத பணி.

dedicated system : தனிப் பயன் முறைமை : ஒதுக்கப்பட்ட முறைமை : ஒரே ஒரு பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினியை அடிப்படையாகக் கொண்ட கருவி. எடுத்துக்காட்டு சொற்களை வகைப்படுத்துதல். மற்ற பணிகளைவிட எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்காக அதனைப் பயன்படுத்துவது எளிது. பொதுவான நோக்கங்களுக்கான முறைமைகள் அதிக கொடுக்கக்மாக வளைந்து கூடியவை.

dedicated word processor : தனிப்பயன் சொல் தொகுப்பி : ஒதுக்கப்பட்ட சொல் வகை செய் கருவி : இக்கருவியின் வன்பொருள், சொற்களை வகை செய்வதற்காக வடிவமைக்கப் பட்டதாகும். இதன் விசைகள் சிறப்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு, நிரல்கள் அதன் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச் சொற்களை நீக்கு, வாக்கியத்தை நீக்கு அல்லது இடையில் சேர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

de facto standard : நடைமுறைத் தர அளவு : போட்டியில்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தர நிர்ணய அமைவனங்களினால் அதிகார

முறையில் தரநிலை வாய்ந்ததாக