பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

demo

417

demultiplexer


கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்படும் அறிக்கை. எதிர்பார்க்கப்படாத கேள்விகளுக்கான விடையாக வழங்க, மிக முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான முடிவுகளை மேற்கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது.

demo : செயல் விளக்க செய் முறை : விளம்பரம், விற்பனை நோக்கங்களுக்காக ஒரு பயன் பாட்டுச் செயல்முறையில் சில செயற்பணிகளை எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை.

demodulate : அதிர்விணக்க நீக்கம் : ஒத்தியல்புடைய சைகைகளை இலக்கங்களாக மாற்றுவதற்கான செய்முறை. ஊர்தியிலிருந்து தரவு சைகைகளை வடிகட்டுதல்.

demodulation : மீளப்பெறல் : தகவல் தொடர்பில் எடுத்துச் செல்லும் அலை வரிசையில் அனுப்பப்பட்ட ஆதிக்குறியீட்டை மீண்டும் பெறும் நடைமுறை. தரவு தொகுப்புகளில், தரவுத் தொடர்புச் சமிக்கைகள், கணினி முனையச் சமிக்கைகளுடன் இணையச்செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. Modulation என்பதன் இணைப் பகுதியாகும்.

de modulator : மீளப்பெறும் கருவி : தகவல் தொடர்பு இணைப்பு ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்கைகளை பெறும் கருவி. அது, அச்சமிக்கைளை மின் துடிப்புகளாக அல்லது துண்மிகளாக மாற்றி, தரவு தயாரிப்பு எந்திரங்களுக்கு அவற்றை உள்ளீடாகத் தரும். Modulator என்பதற்கு மாறானது.

demonstration programme : சான்று விளக்க நிரல் : முன்மாதிரி நிரல் : 1. உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு நிரலின் செயல் திறனை விளக்கும், அந்நிரலின் ஒரு முன்மாதிரி வடிவம். 2. ஒரு நிரலை விற்பனைக்குக் கொண்டுவரும்முன் அதன் செயல்திறனை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சுருக்கமான வடிவ முன்மாதிரி.

demonstrative education : செயல்முறை விளக்கக் கல்வி.

demount : இணைப்பைக் கழற்றுதல் : கருவி ஒன்றிலிருந்து எழுத அல்லது படிக்கக்கூடிய காந்த சேமிப்பு ஊடகத்தை நீக்குதல், இது வட்டு இயக்கி ஒன்றிலிருந்து வட்டுத் தொகுப்பு ஒன்றை நீககுதல் போனறது.

demultiplexer : ஒருங்கிணைக்கி : பல இணைப்புக் கருவி : ஒருங்கிணைத்து அனுப்பப்


27