பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

departmental processing

419

dereference


கணினி அமைவினைக் கொண்டே செய்முறைப் படுத்துதல்.

departmental processing : துறைசார் செயலாக்கம்.

dependability : நம்பகமான : நம்பத் தகுந்த .

dependency : சார்புநிலை சார்பு : மற்றொரு பணியைத் தொடங்கு முன் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணி ஒன்றை நிறைவேற்றும் உறவு நிலை.

dependent : சார்ந்திருப்பு.

dependent segment : சார்புக்கூறு : தரவு மேலாண்மையில், தரவு தனது முழுப்பொருளுக்காகவும் ஒர் உயர்நிலைத் தகவலை நம்பியிருக்கும் நிலை.

dependent variable : சாரு மாறியல் மதிப்புரு : ஒர் உருமாதிரியின் வெளிப்பாடு. இது, உட்பாடுகளை நம்பியிருப்பதால் இப்பெயர் பெற்றது.

deposit : வைப்பீடு : எந்திரப் பதிவேட்டில் அல்லது நினைவுப் பதிப்பியின் அமைவிடத்தில் தரவுகளைச் சேமித்து வைத்தல்.

depth queuing : முப்பறிமாணத் தோற்றமிடல் : இருபரிமானப் பொருளை முப்பரிமாணத் தோற்றமுடையதாக மாற்றப் பயன்படுத்தும் ஷேடிங் (Shading) போன்ற தொழில் நுட்பம்.

deque : டிகியூ : இருமுனைப் பட்டியல் : Double Ended Queue என்பதன் குறும்பெயருமாகும். பட்டியலின் இரண்டு முனைகளிலும் நீக்கவும், சேர்க்கவும் அனுமதிக்கும் இருபுறமும் உள்ள வரிசை.

dereference : சுட்டு விலக்கம் : மறைமுகச் சுட்டு : நினைவகத் தில் இருத்திவைக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பினை அணுக முகவரிச் சுட்டு (Pointer) என்னும் கருத்துரு சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. சுட்டு என்பது அம்மதிப்பு பதியப்பட்டுள்ள முகவரியையே குறிக்கும். அம்முகவரியில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மதிப்பினை எடுத்தாள அச்சுட்டினையே மறைமுகமாய் பயன்படுத்திக்கொள்ள முடியும். (எ-டு) ; சி மற்றும் சி++ மொழிகளில் int *p, int n = 5, p = & n : என்று கட்டளை அமைக்கலாம். p என்பது, 5 என்னும் மதிப்பு இருத்தி வைக்கப்பட்டுள்ள முகவரியைக் குறிக்கும். p என்பது 5 என்னும் மதிப்பைக் குறிக்கும். இவ்வாறு ஒரு முகவரிச் சுட்டு மூலம் அம்முகவரியிலுள்ள மதிப்பை மறைமுகமாகச் கட்ட முடியும்.