பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

design cycle

422

desk accessories


design cycle : வடிவமைப்புச் சுழற்சி : ஒரு வன்பொருள்அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற்கான முழுத் திட்டம். இதில் சிக்கலை விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக் குறியீடு அமைத்தல், நிரல் தொடர் பிழை நீக்கம், ஆவணப் படுத்தல் ஆகியவை அடங்கும்.

design engineer : வடிவமைப்புப் பொறியாளர் : வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர்.

design error : வடிவமைப்புப் பிழை.

design heuristics : வடிவமைப்புக் கண்டுணர்தல் : ஒரு பெரிய சிக்கல் அல்லது நிரலாக்கத் தொடரை மிகச் சிறியதான எளிதில் சமாளிக்கக்கூடிய 'மாடுல் (module) கூறுகளாகப் பிரிப்பதற்குக் கடைபிடிக்கப் படும் வழிகாட்டுதல்கள்.

design language : வடிவமைப்பு மொழி : வடிவமைப்புப் பணியில் அதன் சொற்றொடர்களையும், இலக்கணங்களையும் பயன்படுத்தக்கூடிய நிரலாக்கத் தொடர்மொழி.

design phase : வடிவமைப்பு நிலை : முன்பே நிர்ணயிக்கப்பட்ட வடிவமைப்புத் தேவைகளைப் பொறுத்து ஒரு தகவல் அமைப்பை உருவாக்கும் செயல்.

design problem : வடிவமைப்புச் சிக்கல்.

design review : வடிவமைப்பு சீராய்வு வடிவமைப்பு : மீள் பார்வை.

design specifications : வடிவமைப்பு வரன்முறைகள் : வடிவமைப்புக் குறியீடுகள் : ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவின் தகவல் தேவைகளை ஆராய்ந்ததன் விளைவு. உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு போன்றவற்றிற்கான வரன்முறைகள்.

design, systems : முறைமை வடிவமைப்பு.

design template : வடிவமைப்புப் படிம அச்சு.

design time : வடிவமைப்பு நேரம்.

design walkthrough : வடிவமைப்பு மேல்நோக்கு : பயன்படுத்துவோர், செயல்முறையாளர்கள், ஆலோசகர்கள் ஆகி யோர் ஒரு பொறியமைவினை மேலிருந்து நோக்குதல்.

desk accessories : வடிவமைப்புத் தேவைகள் : வரைபட முறைகளைச் சார்ந்த அமைப்பில், பிற