பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

desk checking

423

desktop enhancer


ஆவணங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பணியாற்றும் கருவிகள்.

desk checking : மேசை சோதனை : நிரலாக்கத் தொடர் அளவையில் பிழைகளைச் சோதிக்கும் மாதிரி தரவு பொருள்களைக்கொண்டு சோதித்தல். கணினியில் செயல்படுத்துவதற்கு முன்பு இத்தகைய சோதனை செய்யப்படுகிறது.

desk scanner : மேசை வருடி : மேசை நுண்ணாய்வுக் கருவி : மேசை நுண்ணாய்வுக் கருவியின் சுருக்கப் பெயர். இரு உருக்காட்சிகளை நுண்ணாய்வுச் செய்யப்பயன்படுகிறது. இந்த உருக்காட்சிகளைப் பின்னர் ஒரு மேசை வெளியீட்டு அல்லது வரைகலை மென்பொருள் உருவாக்கிய ஒர் ஆவணத்தில் பதிவு செய்யலாம். நுண்ணாய்வு செய்த உருக்காட்சிகளை விருப்பம்போல் வெட்டலாம், ஒட்டலாம். கையால் இயக்கும் நுண்ணாய்வுக் கருவிகளும், தட்டைப்படுகை நுண்ணாய்வுக் கருவிகளும் கிடைக்கின்றன.

desktop : மேசைப் பதிப்பு தொழில் நுட்பம் : ஆவணங்கள், காகிதங்கள் மற்றும் துணைப் பொருள்களைக் கொண்ட திரையில் காட்டப்படும் காட்சி.

desktop computer : மேசைக் கணினி : துண்செயலகம், உள்ளீடு, வெளியீடு, சேமிப்புச் சாதனங்களை ஒன்றாக, கணினி அமைப்பாக உருவாக்கி மேசை மேல் வைக்கக்கூடிய சிறு கணினி. வீட்டுக் கணினி (Home Computer), நுண் கணினி (Micro Computer), தனி முறைக் கணினி (Personal Computer) என வகை உண்டு.

desktop conferencing : மேசைக் கலந்துரையாடல்; கணினிக் கருத்தரங்கு தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத் தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஒரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் பயன்பாட்டு நிரல்களிலுள்ள தரவுகள் மட்டுமின்றி கேட்பொலி (audio) ஒளிக்காட்சி (video) தரவு பரிமாற்றமும் இயலக்கூடியதே.

desktop enhancer : மேசைக் கணினித் திறன்கூட்டி : மைக் ரோசாஃப்ட் விண்டோஸ், மேக் ஒஎஸ் போன்ற சாளரக் காட்சி அடிப்படையிலான இயக்க முறைமைகளின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும் மென் பொருள் தொகுப்பு. திறன் மிகுந்த கோப்பு உலாவி, இடைச்