பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

destination

425

detail file


destination:சேருமிடம்:இலக்கு ஒரு தரவு மாற்றல் இயக்கத்தின்போது தரவுகளைப் பெறுகின்ற சாதனம் அல்லது முகவரி.

destination disk:இலக்கு வட்டு.

destination file:சேரிடக் கோப்பு.

destination,object:இலக்கு'.

destructive memory:அழிவுறு நினைவுப் பதிப்பி: படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும்.

destructive operation:சிதைப்புச் செயல்பாடு; அழிப்புச் செயல்பாடு.

destructive read:அழித்திடும் படிப்பு: சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.ஆனால் நினைவகத்தி லுள்ள தரவு அழிக்கப்பட்டுவிடும்.இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தக வலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச்சிறப்பான நுட்பம் தேவைப்படும்.

destructor அழிப்பி;சிதைப்பு:பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு.

detachable keyboard:பிரிக்கக் கூடிய விசைப்பலகை: காட்சித் திரை அல்லது வட்டு அலகுபோல ஒரே அமைப்பில் சேர்த்து உருவாக்கப் படாத விசைப்பலகை ஒரு கம்பியின் மூலம் கணினியுடன் இணைக்கப்பட்டு காட்சித்திரையை வைப்பதில் அதிக வசதியைத் தருகிறது.

detail:விவரம்:பெரியகோப்பு அல்லது வரைபடத்தின் சிறிய பிரிவு.

detail band:விவரக் கற்றை.

detail diagram:விவர வரைபடம்: ஹிப்போவின் (HIPO) ஒரு மாடுலில் (module) பயன்படுத்தப்படும் தரவுப் பொருள்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைக் குறிப்பிடும் வரைபடம்.

detail file:விவரக் கோப்பு: தற்காலிகத் தகவலைக்கொண்ட கோப்பு.ஒரு குறிப்பிட்ட நேரத் தில் நடைபெற்ற மாற்றங்களைக் கொண்ட பதிவேடுகள் போன்றவை,தற்காலிகத் தகவலாகக் கொள்ளப்படுகின்றன.