பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

detail flow chart

426

developer's toolkit


detail flowchart : விவர வரைபடம் : ஒரு குறிப்பிட்ட நிரலாக்கத் தொடருக்குள் தேவைப்படும் செயலாக்க நிலைகளை குறிப்பிடும் வரைபடம்.

detail line : விவர வரி : செய்முறைப்படுத்தப்படும் ஒவ்வொரு பதிவேட்டையும் கண்காட்சியாகக் காட்டுகிற வரி.

detail printing : விவர அச்சிடல் : கணினிக்குள் படித்து அனுப்பப்படும் ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவரி அச்சிடப்படும் இயக்கம்.

detail report : நுணுக்க அறிக்கை : அச்சிட்ட அறிக்கை. இதில் ஒவ்வொரு வரியும் படித்து முடித்த உள்ளீட்டுப் பதிவேட்டை ஒட்டியே அமையும்.

detail view : விளக்கமான பார்வை;விளக்கக் காட்சி.

detection : கண்டுபிடித்தல் : ஒரு சிக்கலைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் ஒரு நிகழ்வை அமைதியாகக் கண்காணிப்பது.

determinant : தீர்வுப்பண்பு : தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாயின், அத்தகைய பண்புக்கூறு/கூறுகளை தீர்வுப் பண்பு என்கிறோம். சார்ந்து நிற்கும் பண்புக்கூறு/கூறுகளை சார்புப் பண்பு எனலாம்.

determinism : முன்னறி திறன் : கணினிவழிச் செயல்பாடுகளில், பலன் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும் திறன். ஒரு செயலாக்க முறைமையில் தரவு எவ்வாறு கையாளப்படும் என்பதை முன்கூட்டி அறிதல். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட உள்ளீடுகளைத் தரும்போது, குறிப்பிட்ட வெளியீட்டையே எப்போதும் தரக்கூடிய பாவிப்பு (Simulation) முன்னறியக்கூடிய பாவிப்பு (A Deterministic Simulation) எனப்படுகிறது.

deterministic model : முடிவு செய்யும் கருவி; உறுதியாக்கும் கருவி மாதிரி : நேரடியான காரண-விளைவுத் தொடர்புகளையும் தெரிந்த நிலையான மதிப்புகள் உள்ள தரவுகளைப் பற்றியும் ஆய்வு நடத்த உதவும் கணித மாதிரி.

developer : உருவாக்குபவர்.

developer's toolkit : உருவாக்கக் கருவித் தொகுதி : ஒரு பயன்பாட்டுச் செயல்முறையை ஒரு குறிப்பிட்ட சூழலுடன் இணைப்பதற்கு செயல்முறைப்படுத்து