பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

device, external

429

device number


நிருவகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் பயன்பாட்டுச் செயல்முறை.

device, external : புறச் சாதனம்.

device flag : சாதனக் குறி : ஒரு சாதனத்தின் தற்போதைய தகுதியைப் பதிவு செய்யும் ஒரு துண்மிப் பதிவு.

device header : சாதனத் தலைப்பு : ஒரு DOS சாதன இயக்கி நிரல்கூறில், சாதனத்தை அடையா ளங் காட்டுவதற்குள்ள தொடக்கப் பகுதி.

device independence : சாதன சுதந்திரம் : உள்ளீடு/வெளியீடு சாதனங்களின் தன்மைகளின்றி உள்ளீடு/வெளியீடு இயக்கத்தின் நிரலை அளிக்கும் திறன்.

device, intelligent : நுண்ணறிவுச் சாதனம்.

device, input : உள்ளீட்டுச் சாதனம்.

device interrupt handler : சாதன இடையீட்டுக் கைப்பிடி : ஒரு சாதன நிரல்கூறுவின் உடற் பகுதி. இது சாதன இயக்கிச் செயற்பணிகளைக் கொண்டு செல்கிற குறியீட்டினைப் பற்றி வைத்துக் கொள்கிறது.

device manager : சாதன மேலாளர் : ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (configuration settings) பார்வையிடவும் மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (Interrupts) அடிப்படை முகவரிகள், நேரியல் (Serial) தகவல் தொடர்பின் அளபுருக்களை (Parameters) பார்க்க வோ;மாற்றவோ முடியும்.

device media control language : சாதனத் தரவுத் தொடர்புக் கட்டுப்பாட்டு மொழி : ஒரு தரவு தளத்தை ஒரு வட்டுச் சேமிப்புச் சாதனத்தின் மீது வரைவதற்குத் தரவுத்தள நிர்வாகி பயன் படுத்தும் மொழி.

device mode : சாதனக் கணு.

device name : சாதனப் பெயர் : ஐபிஎம் தனிமுறைக் கணினி (Personal computer) அல்லது 3840 மாடல் வட்டு அலகு போன்ற ஒரு வகையான சாதனத்தின் பொதுப்பெயர்.

device number : சாதன எண் : ஒரு குறிப்பிட்ட புறநிலைச் சாதனத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஓர் எண். இது கணினியில் அச்சாதனததை அடை யாளங்காணப் பயன்படுத்தப்படுகிறது.