பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

device options

430

diagnostic message


device options : சாதன விருப்புத் தேர்வுகள்.

device strategy : சாதன உத்தி : ஒரு சாதன இயக்கி நிரல்கூறின் ஒரு பகுதி. இது, இயக்கியை வேண்டுகோள் தலைப்புடன் இணைக்கிறது. இந்தத் தலைப்புத்தான், இயக்கியை நிருவகிப்பதற்கு 00S உருவாக்குகிற நிலையளவுருக்களின தொகுதி யாகும்.

devorak keyboard : துவோரக் விசைப்பலகை.

DIA : டயா;டிஐஏ : 'ஆவணப் பரிமாற்றக் கட்டு மானம்'என்று பொருள்படும் Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழு த்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறை மைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA), ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினி களுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங் களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழிமுறை களை டயா வரையறுத்துள்ளது.

diacritical mark : பிரித்தறிக் குறியீடு : ஒலிபிரித்தறி அடையாளம் : ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படு கின்றன.

diagnosis : குறைகண்டறிதல் : பழுதறிதல் : கணினி கருவியிலோ அல்லது நிரலாக்கத் தொடர் மற்றும் அமைப்புகளிலோ உள்ள பிழை அல்லது கோளாறுகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறை.

diagnostic : ஆய்ந்தறிதல் : பழுதறிதல்.

diagnostic board : குறைகுறி பலகை : பழுதிற பலகை : குணங் குறிகாண் சோதனைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள விரிவாக்கப் பலகை. இது, தனது சொந்தப் படிப்பியின் வாயிலாக முடிவு களை அறிவிக்கிறது. இதன் மூலம் கணினியின் தவறான செயற்பாட்டினைச் சோதனை செய்ய லாம்.

diagnostic compiler : பழுதறி தொகுப்பி, பழுதறி மொழிமாற்றி.

diagnostic message : குறைகுறி காண் செய்தி : பழுதறி செய்தி : முறையற்ற நிரல்களை ஒரு செயல்முறையாளருக்குச் சுட்டிக்