பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dialog box

432

dial-up service


இடையே நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சி.

dialog box : உரையாடல் கட்டம்/சட்டம் : பயனாளருக்கு பல்வேறு வினாக்களை அல்லது மாற்றுகளைக் கூறும் ஒரு பட்டியல். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் சிலவற்றுக்குப் பயன் படுத்துபவர் பதிலளிப்பார். (இதனாலேயே உரையாடல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) பிறகு முக்கிய பட்டியலுக்கு அல்லது முந்திய/ அடுத்த பணிக்குச் செல்கிறார்.

dialogue management : உரையாடல் மேலாண்மை.

dialogue window : உரையாடல் சாளரம்;சொல்லாடற் பலகணி.

dials : சுட்டுமுகப்பு;அளவு சுட்டு முகப்பு.

dial-up : தொலைபேசி இணைப்பி : செய்தித் தரவுத் தொடர்புகளில், தொலைபேசி இணைப்பி பயன்படுத்தி அல்லது அழுத்தும் பொத்தான் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தொலை பேசி அழைப்பு ஏற்படுத்துவது.

dial up access : தொலைபேசி வழி அணுகல் : ஒரு தகவல்தொடர்புப் பிணையத்துடன், தொலைதொடர்புத் துறையினரின் தொலைபேசி வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு.

dialup adapter : தொலைபேசி வழித் தகவி.

dial-up IP : தொலைபேசிவழி ஐ. பீ.

dial-up-line : தொலைபேசி இணைப்புத் தொடர்;அழைப்பு வழி : செய்தி தரவுத் தொடர்புகளை பரிமாற்றும் ஊடகமாகப் பயன்படுத்தப்படும் சாதாரண தொலைபேசிக் கம்பித் தொடர்.

dial-up modem : தொலைபேசி மோடம்.

dial-up-network : தொலைபேசி வழி தொடர்பு கொள்ளும் இணையம் : அரசினால் முறைப் படுத்தப்பட்டு இணைய சேவையாளர்களால் நிருவகிக்கப் படும் தொலைபேசி வழி தொடர்புபடுத்தும் இணையம்.

dial-up networking : தொலைபேசி பேசி வழி பிணைப்பு : தொலைபேசி வழி இணைப்புப் பெறும் பிணையம்.

dial-up service : தொலைபேசி அணுகல் சேவை : உள்ளுர் அல்லது உலகளாவிய பொது மக்களுக்கு தொலைபேசிச்