பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

differential configuration

435

digest


வதையும் அடைத்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. முனைந்த பகுதியுள்ள சுற்றுருளை போன்ற பல்லினைகள் மூலம் இது செயல்படுத்தப் பட்டிருந்தது.

differential configuration : வேறு பாட்டளவையியல் உருவமைதி : ஓசையினையும் குறுக்குப் பேச்சுகளையும் கேட்கமுடியாத அளவுக்கு ஒவ்வொரு மின்னியல் சைகைக்கும் கம்பியினைகளைப் பயன்படுத்துதல். இது, ஒற்றை முனை உருவமைதியிலிருந்து (Single-ended Configuration) வேறுபட்டது.

differentiator : வேறுபாட்டளவி;வேறுபாட்டளவைக் கருவி : மாறு பாடளப்பான்;உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண்டிருக் கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளியீட்டு மின்அளவு, உள்ளீட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளியீட்டளவு dx/dt ஆகும்.

DF fies : டிஐஎஃப் கோப்புகள் : டிஐஎஃப் தரநிர்ணயத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கோப்புகள். பல்வேறு எந்திரங்களுக்கிடையே மாற்றிக் கொள்ளக்கூடிய கட்டு. கோப்புகள் ஏற்புடையனவாக இருந்தாலும், ஆப்பிள் டிஐஎஃப் கோப்பு வட்டினை நேரடியாக ஐபிஎம் எந்திரத்தில் படிக்க முடியாது. இந்த வட்டுகள் வெவ்வேறு எந்திரத்துக்காக வெவ்வேறு முறையில் அமைக்கப்படுகின்றன.

diffusion : பரவச் செய்தல் : சிலிக்கான் மென்தகடு போன்ற ஒரு பொருளின் மீது துய்மைக் குறைவு. அணுக்களைச் சேர்க்கும் அதிவெப்ப செயல்முறை. இவை சென்று சேரும் பொருளில் உள்ள அணுக்களை மாற்றி அதில் உள்ள பொருள்களின் தன்மையை, விரும்பும் வழிகளில் மாற்றிவிடும் நிலை சக்தி உள்ளவை. சிலிக்கானில் துய்மைக்குறைவுகளைச் சேர்க்க 900 முதல் 1, 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் பரவச் செய்யப் படுகிறது.

digest : சுருக்கத் தொகுப்பு : 1. இணையத்திலுள்ள செய்திக் குழுவில், இடையீட்டாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்களைக் கொண்ட தொகுப்பு. 2. ஒரு அஞ்சல் பட்டியலிலுள்ள வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பப்படும் தனித்தனிக் கட்டுரைகளுக்குப் பதிலாக அவற்றின் சுருக்கங்