பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digital sorting

441

digital tracer


மல்ட்டிடெக் சிஸ்டம்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள ஒரு நவீனத் தொழில் நுட்பம். ஒற்றைத் தொலைபேசித் தடத்தில் உரையாடலையும், தகவலைப் பரிமாற்றத்தையும் இயல்விக்கும் தொழில்நுட்பம். குரலை அனுப்பவேண்டிய தேவை எழும்போது பொதித் தகவல் பரிமாற்ற முறைக்கு மாறிக் கொள்ளும். இலக்க முறையாக்கப்பட்ட குரல் பொதிகள், கணினித் தரவு மற்றும் கட்டளைப் பொதிகளோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

digital sorting : இலக்கமுறை பகுத்தல்;இலக்கமுறை வரிசையாக்கம் : பட்டியலிடும் எந்திரத்தில் பிரிப்பது போன்றதொரு பிரிக்கும் நுட்பம். விசைகளை வரிசைப்படுத்துவதிலும், தரவுகளின் மதிப்பாலும் இடைப்பட்ட காலத்திற்கு நேரடி விகிதமாக எழுத்துகளின் எண்ணிக்கை அமையும முறை.

digital speech : இலக்கமுறைப் பேச்சு : பதிவான பேச்சை சிறு ஒலி அலகுகளாகப் பிரித்ததன் நிலை. ஒவ்வொரு அலகும் உரத்த ஓசை, பிட்ச், டிம்பர் போன்றவற்றை எண்களாகக் குறிப்பிடப்பட்டு பேச்சின் இலக்கமுறைக் குறியீடாக மாற்றப்படும்.

digital subscriber line : இலக்கமுறை வாடிக்கையாளர் இணைப்பு : இது ஒர் ஐஎஸ்டிஎன் பிஆர்ஐ இணைப்பு அல்லது தடம். வாடிக்கையாளரின் வளாகம் வரை இலக்கமுறைத் தகவல் பரிமாற்றம் இயலும், முந்தைய தொலைபேசித் தடத் தகவல் பரிமாற்றத்திலிருந்து மாறுபட்டது. சுருக்கமாக டிஎஸ்எல் (DSL) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வழித்தடத்தில் இணைய இணைப்புப் பெற்றால் 24 மணி இணையத்தகவல் பரிமாற்றம் இயலும். அதிவேகத் தகவல் பரிமாற்றமும், குறைந்த நேரத்தில் அதிக அளவு பதிவேற்றமும் பதிவிறக்கமும் இயலும்.

digital switching (DVI) : இலக்கமுறை இணைப்பாக்கம்.

digital telephone : இலக்கமுறைத் தொலைபேசி.

digital to analog converter- D-A Converter : இலக்க முறையிலிருந்து அலைவு முறைக்கு மாற்றும சாதனம் : நுட்பமான இலக்கமுறை எண்களை தொடரலைவான சமிக்கைகளாக மாற்றப் பயன்படுத்தப் எந்திர அல்லது மின்னணுச் சாதனங்கள்.

digital tracer : இலக்க வரைபடக்கருவி : படங்களையும், வரை