பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Digital Video Interactive

443

digitizing tablet


பட வட்டு-படிக்க மட்டும் : இப்போது பயன்பாட்டில் உள்ள ஒளிக்காட்சி வட்டு. இதிலுள்ள விவரங்களைப் படிக்க மட்டுமே முடியும். அழித்தெழுத முடி யாது. 4. 7 மற்றும் 8. 5 ஜி. பி கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. ஒருபுறம் ஒரடுக்கு, ஒருபுறம் ஈரடுக்கு, இருபுறம் ஒரடுக்கு, இருபுறம் ஈரடுக்கு என நான்கு முறைகளில் இந்த வட்டில் தரவுகள் பதியப்படுகின்றன. அதிக அளவாக 17 ஜி. பி வரை தரவு பதியமுடியும்.

Digital Video Interactive (DVI) : இலக்கமுறை ஒளிக்காட்சி உறவாடல்; எண்ணுரு நிகழ்பட ஊடாடல் : ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து, நுண்கணினிப் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்காக உருவாக்கிய, இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் கேட்பொலித் தரவு சுருக்க முறை. வன்பொருள், மென்பொருள் இணைந்த ஒர் அமைப்பு.

digit, binary coded : இருமக் குறிமுறை இலக்கம்.

digit, check : சரிபார்ப்பு இலக்கம்.

digitize : இலக்கமாக்கு : பட ஒவியம் போன்ற வரைபட முறைத் தோற்றத்தை இலக்க முறை குறியீடு செய்து வரை முறைப் படமாக மாற்றுதல்.

digitized type : இலக்கமாக்கிய எழுத்துரு : கணினி படிக்கத்தக்க வடிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துரு. இது புள்ளிகளின் அல்லது கோடுகளின் ஒரு தொகுதியைக் கொண்டது.

digitizer : இலக்கமாக்கி : பேனா போன்ற எழுது கருவி மூலமோ அல்லது பிற சுட்டுவி (கர்சர்) மூலமோ இயக்குபவர் எழுத உதவும் தட்டையான பலகையைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். இயக்குபவர் எழுதும் வடிவங்கள் கணினி அமைப்பின் நினைவகத்தில் தானாகப் பதிவாகி செயலாக்கம் பெறும்.

digitizing : இலக்கமுறை ஆக்கல் : படங்கள், ஒவியங்கள் போன்ற வற்றை, கணினி அமைப்பு செயலாக்கம் செய்யக்கூடிய இலக்க முறை தரவுகளாக மாற்றுதல்.

digitizing tabtet : இலக்க முறையாக்கும் பலகை : வரைமுறை மற்றும் படத் தரவுகளை கணினியில் பயன்படுத்தும் இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளீட்டுச் சாதனம். இதில் ஒரு மேல் தகடும் அதன் அடியில் மெல்லிய கம்பித் தொகுதிகளும் இருக்கும்.