பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dingbats

446

direct access


dingbats : டிங்பேட்ஸ் : எழுத்துருவாக்க மற்றும் மேசை மோட்டு வெளியீட்டுக் குறியீடுகளின் தொகுதி'இன்டர்னேஷனல் டைப்ஃபேஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. இதில், அம்புக்குறிகள், கட்டுக் கைகள், நட்சத்திரக் குறிகள், வட்டமிட்ட இலக்கங்கள் அடங்கியிருக்கும். இவை"ITC Zapf Dingbats"என்று அழைக்கப்படுகின்றன.

dinousaurs : டினோசார்ஸ் : 'கம்மோடோர்-64'என்ற இல்லக் கணினியில் பயன் படுத்துவதற்கான ஒரு மென்பொருள்.

diode : இருமுனையம் : ஒரு திசையில் மட்டும் மின் ஒட்டத்தைத் தடுத்து அடுத்த திசையில் மின்ஒட்டத்தை அனுமதிக்கும் மின்னணுச் சாதனம்.

diode transistor logic : டயோடு டிரான்சிஸ்டர் லாஜிக்;இரு முனைய மின்மப்பெருக்கி இணைப்புமுறை : ஒருதிசை இருமுனையம், மின்மப் பெருக்கி மற்றும் மின்தடுப்பி ஆகிய உறுப்புகளைக் கொண்ட ஒருவகை மின்கற்று வடிவாக்கம். தருக்கமுறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

diogonal : மூலைவிட்டம்.

DIP : டிஐபி : Dual Inline package என்பதன் குறும்பெயர்.

dipole : இருதுருவம் : சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ள நேர் எதிர்மின் செறிவுகள். இருவேறு எதிரெதிர் காநதத துருவங்கள்.

DIP switches : டிஐபி நிலை மாற்றிகள் : பல கணினிகளிலும் வெளிப்புறப் பொருள்களிலும் காணப்படும் சிறிய நிலை மாற்றிகள். சாதனங்களை நிலை நிறுத்தவும், சரிசெய்யவும் பயன்படுகிறது.

dir : (டிர்) : டாஸ் இயக்க முறைமையில் உள்ள கட்டளை. இக் கட்டளை இருப்புக் கோப்பகம் அல்லது கோப்புறையிலுள்ள கோப்புகள் மற்றும் உள்கோப்பகங்களின் பட்டியலைத் திரையில் காட்டும். ஒரு குறிப்பிட்ட கோப்பக அல்லது உள்கோப்பகத்தின் உள்ளடக்கத்தையும் உரிய பாதையைக் குறிப்பிட்டு அறிய முடியும்.

direct access : நேரடி அணுகுமுறை;நேர்வழிச் சேர்வு : சுற்றிலும் உள்ள தரவுகளைத் தொடாமல் நேரடியாக, தேவையான தரவுகளை மட்டும் தேடி எடுக்கும் அல்லது தரவுகளை சேமிக்கும் செயல்முறை, வரிசை முறை அணுகுமுறையில்