பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

direct access file

447

direct data entry


ஒவ்வொரு கோப்பையும் படித்தே செல்லவேண்டியிருக்கும் என்பதால் இது விரைவான முறை.

direct access file:நேர்வழிக் கோப்பு.

direct access processing:நேரடி அணுகல் செயலாக்கம்:நேரடி செயலாக்கம் மற்றும் தற்செயல் செயலாக்கம் போன்றது.

direct access storage:நேர்வழிச் சேகரம்.

Direct Access Storage Device(DASD):நேரடி அணுகல் சேமிப்புச் சாதனம்: தகவல் இருப்பிடங்களை நேரடியாக முகவரியிட அனுமதித்து தேவையான தகவலை நேரடியாக எந்திர முறையில் அணுக அனுமதிக்கும் சேமிப்பு ஊடகம்.

direct address:நேரடி முகவரி:ஒரு இயக்கப்படும் ஒரு பொருளின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் முகவரி.

direct cable connection:நேரடி வட இணைப்பு:இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ(I/O)துறை வழியாக,இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி,நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல்.பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புகளுக்கு வெற்று இணக்கி வடம்(NULL Modem Cable)என்னும் சாதனம் தேவைப்படும்.

direct connect modem:நேரடி இணைப்பு அதிர்வினக்கி(மோடெம்):தரவுப் பரப்புதலுக்குப் பயன்படுவதற்காக தொலைபேசியுடன் நேரடியாக இணைக்கப் படும் அதிர்விணக்கி(மோடெம்).

direct conversion:நேரடி மாற்றல்:ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றி புதிய முறையை மட்டும் செயல்படுத்தும் மாற்றல் முறை.

Direct Coupled Transister logic;DCTL:நேரடி இணைப்பு மின் பெருக்கி அளவை:மின் பெருக்கிகளை மட்டுமே செயல்படும் பொருள்களாகக் கொண்ட மின் இணைப்பு முறைமை.

direct current:நேரடி மின்சக்தி:மின்கலத்திலிருந்து அளிப்பது போன்று ஒரு திசையில் மட்டும் மின்னணுக்களின் ஒட்டம்.

direct data entry:நேரடி தரவுப் பதிவு:நேர்முக முகப்புகள் மூலமோ அல்லது எந்திரம் படிக்கக்கூடிய மூல ஆவணங்கள் மூலமோ கணினியில் நேரடியாக தரவுகளை பதிவு செய்தல்.