பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

direct search index

449

directory replication


direct search index : நேர் வழித்தேடல் (அட்டவணை).

direct sequence : நேரடித் தொடர் வரிசை : அகலக்கற்றைத் தரவு தொடர்பில், பண்பேற்றத்தின் ஒரு வடிவம். தொடர்ச்சியான இருமத் துடிப்புகளால் சுமப்பி அலை பண்பேற்றம் செய்யப்படுகிறது.

direct X : டைரக்ட் எக்ஸ் : கணினியின் ஒலி மற்றும் வரைகலைக்கான வன்பொருள் சாதனங்களை, ஒரு பயன்பாடு நேரடியாக அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தித்தரும் ஒரு மென்பொருள். இது விண்டோஸ் 95/98-ல் செயல்படக் கூடியது.

directory : விவரப்பட்டியல்;தரவுக் குவியல்;அடைவு : 1. மென் பொருளை பல தனித்தனி கோப்புகளாகப் பிரித்து, அந்தக் கோப்புகளின் இருப்பிடத்தைக் கண்டுரைக்க தகவல் பட்டியலைக் கொண்டுள்ள ஒரு சாதனம். 2. சேமிப்பு ஊடகத்தில் உள்ள அனைத்துப் பெயர்கள் மற்றும் இடங்களைக் கொண்ட, எல்லா கோப்புகளையும் உள்ளடக்கிய பட்டியல் கோப்பு.

Directory Access Protocol : கோப்பக அணுகு நெறிமுறை : எக்ஸ் 500 கிளையன் (Client) களுக்கும் வழங்கன் (Server) களுக்கும் இடையே நடை பெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் நெறிமுறை.

directory management : விவரக்குறிப்பேட்டு மேலாண்மை : ஒரு வட்டில் விவரக்குறிப்பேடுகளைப் பேணிக் கட்டுப்படுத்துதல். இது பெரும்பாலும் பட்டி யலிடும் மென்பொருளைக் குறிக்கிறது. இது, நிரல்களைப் பதிவு செய்வதை விடப் பயன்பாட்டுக்கு எளிதானது.

directory replication : கோப்பக நேர்படியாக்கம் : ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறு களப் பகுதியிலுள்ள இறக்கு

மதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்கன்களிலோ பணிநிலையங் களிலோ நகலெடுத்து வைத்தல். இவ்வாறு நேர்படியாக்கம் செய்வதில் நன்மை உள்ளது. கோப்புகள் மற்றும் கோப்பகங்களின் ஒரே மாதிரியான தொகுதிகளை பல்வேறு கணினிகளில் பதிவுசெய்து வைத்துப் பராமரிக்கும் பணியை நேர்படியாக்கம் எளிமையாக்குகிறது. மூலத் தொகுதியின் ஒரேயொரு படியை மட்டும் பராமரித்தல் போதும்.