பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

directory service

450

disable


directory service : கோப்பக சேவை : பிணையத்திலிருக்கும் ஒரு சேவை. ஒரு பிணையத்தில் பணிபுரியும் பயனாளர் ஒருவர் பிற பயனாளர்களின் அஞ்சல் முகவரிகளை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரு பயனாளர், பிணையத்திலுள்ள புரவன் கணினிகளையும் (hosts) சேவைகளையும் அறிந்து பயன்பெற உதவுகிறது.

directory structure : விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு : துணைச் சேமிப்புச் சாதனங்களில் பல்வேறு விவரக் குறிப்பேடுகளைப் படியடுக்கு முறையில் வரிசைப்படுத்துதல், இந்த விவரக் குறிப்பேட்டுக் கட்டமைவு, விவரக் குறிப்பேடு களுக்கிடையிலான உறவுநிலைகளைக் குறிக்கிறது. பல்வேறு மென்பொருளைப் பயன்பாடுகள் விவரக்குறிப்பேட்டுக் கட்ட மைவினைத் திரையில் அச்சு நகலாகக் காட்டுகின்றன அல்லது வன்படியாகத் தருகிறது.

directory tree : விவரக் குறிப்பேட்டு மரம் : ஒரு வட்டினுள் பல்வேறு தகவல் குறிப்பேடுகளையும் துணைக் குறிப்பேடுகளையும் காட்டுகிற படிமுறை உருக்காட்சி.

dirty : அழுக்கு;மாசு : தரவு தொடர்புத் தடத்தின் தரத்தைக குறிக்கப் பயன்படும் சொல். அதிகப்படியான இரைச்சல் காரணமாக தரவு சமிக்கையின் தரம் தாழ்ந்து போதல்.

dirty bit : அழுக்கு பிட்;மாசுத் துண்மி : முதன்மை நினைவகத்திலுள்ள தகவல் உடனடிப் பயன்பாட்டுக்கென இடைமாற்று (cache) நினைவகத்தில் இருத்தப்படுகிறது. அத்தகவல் மாற்றம் அடைந்துள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் துண்மி. இதனை அடையாளமாகக் கொண்டே முதன்மை நினைவகத்திலுள்ள தகவலும் மாற்றம் செய்யப்படுகின்றது.

dirty power : சீரற்ற மின்விசை : அழுத்த ஏற்றத்தாழ்வுகள், ஒசை, இறுக்கம், பெருக்கம் போன்ற சீரற்ற மாற்று மின்னோட்ட விசை. இது அலுவலகத்திலுள்ள மின் பயன்பாட்டு அல்லது மின்னணுவியல் சாதனத்தினால் உண்டாகிறது.

dirty ROM : அழுக்கு ரோம்;அழுக்குறு அழியா நினைவகம் : படிக்க மட்டுமே முடிகிற (திருத்த/அழிக்க முடியாத) நினைவகத்தை ரோம் என்கிறோம்.

disable : செயலற்றதாக்கல்;முடக்கமாதல் : இயல்பான திறனைத் தடுத்தல் அல்லது