பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disabled folders

451

disaster dump


நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன்றைப் பயன்படுத்தல்.

disabled folders : செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள் : மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் பல்வேறு கோப்புறைகள் இவ்வாறு ஆக்கப் பட்டுள்ளன. முறைமைக் கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகள், முறைமை நீட்டிப்புகள், கட்டுப்பாட்டு பாளங்கள் மற்றும் நீட்டிப்பு மேலாளர் (Extension Manager) எனப்படும் மென்பொருள் கருவி கொண்டு கணினி யிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய உறுப்புகளையும் இக்கோப்புறைகள் கொண்டுள்ளன. செயல்முடக்கப்பட்ட கோப்புறையில் தற்போதுள்ள உறுப்பு கள், கணினியை இயக்கும் போது தொடக்கத்தில் நிறுவப் படுவதில்லை. ஆனால், அதன் பிறகு நீட்டிப்பு மேலாளர் நிரலால் அவ்வுறுப்புகள், அவற்றின் இயல்பான கோப்புறைகளுக்கு தாமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

disassembler : பிரிக்கும் நிரல் தொடர்;பிரிப்பி : எந்திர மொழிக் குறி யீட்டை ஏற்று பொறிமொழிக் குறியீட்டை உருவாக்குதல்.

disassociate : தொடர்புநீக்கம் : விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் ஒர் ஆவணம் ஏதேனும் ஒரு பயன்பாட்டு மென் பொருளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, doc என்ற துணைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வேர்டு பயன் பாட்டுடனும், xls ஆவணங்கள் எக்செல், mdb ஆவணங்கள் அக்செஸ், ppt ஆவணங்கள் பவர்பாயின்ட், . htm ஆவணங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவற்றுடனும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொடர்பினை மாற்றி முடியும். bmp ஆவணங்கள் பெயின்ட் பயன் பாட்டுடன் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. . bmp ஆவணம் ஒன்றின் பெயர்மீது இரட்டைக் கிளிக் செய்தால், அந்த ஆவணம் பெயின்ட் பயன்பாட்டில் திறக்கப்படும். இதனை மாற்றி, கோரல் பெயின்ட் பயன்பாட்டில் அல்லது பெயின்ஷாப் புரோவில் திறக்கும்படி செய்யலாம்.

disaster dump : அபாய ஏற்பாடு : மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமானால் அதற்கு மாற்றுச் செயல் திட்டம்.