பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

discrete device

453

disk array


வெண்கள் மிகக் குறைந்த பொருள் கொண்டவை.

discrete device : பிரிநிலைச் சாதனம் : ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி.

discrete multitone : தொடர்சியற்ற பல்தொனி : தொலைத் தகவல் தொடர்பில் படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம். இருக்கின்ற அலைக் கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு கூறு போட்டு, ஒர் இணைச் செப்புக்கம்பியில் 6 mbps (வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல் வரை அனுப்ப, இத் தொழில் நுட்பம் வகை செய்கிறது.

discretionary access control : தனிவிருப்ப அணுகுக் கட்டுப்பாடு.

discretionary hyphen : பிரிநிலை ஒட்டுக்குறி : ஒரு சொல்லில் இணைப்புக் குறியிடுவதற்காகப் பயனாளர்குறித்துள்ள இடம். சொல், ஒரக் கோட்டுக்கும் மேலே செல்லுமானால், அது அந்த இடத்தில் பிளவுபடும்.

discussion groups : இணைய விவாதக் குழுக்கள்;இணையக் கலந் துரையாடல் குழுக்கள் : தமக்கிடையே பொதுவான ஆர்வமுள்ள பொருள்பற்றி கணினிப் பிணையத்தில் கலந்துரையாடும் பயனாளர்களைக் குறிக்கிறது. இணையத்தில் மின்னஞ்சல் பட்டியல், இணையச் செய்திக் குழுக்கள் மற்றும் ஐஆர்சி எனப்படும் இணையத் தொடர் அரட்டை போன்றவற்றைக் குறிக்கவே இப்போது இச்சொல்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

disk : வட்டு;மின்காந்தத் தட்டு : கணினியால் அணுகக்கூடிய தகவல் மற்றும் நிரலாக்கத் தொடர்களை சேமிக்கும் மின்காந்த சாதனம். நிலைத்த வட்டு அல்லது வளையக்கூடிய செயற்கை இழை வட்டுகளின் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

disk access : வட்டு அணுகல் : வட்டில் எழுத/படிக்க உதவும் முனை தரவை வட்டில் எழுதவோ படிக்கவோ அணுகுதல்.

disk access time : வட்டு அணுகல் நேரம் : வட்டில் குறிப்பிட்ட ஒன்றின் இருப்பிடம் அறிய தேவைப்படும் நேரம். தேடும் நேரம் என்றும் அழைக்கப் படும். மொத்த அணுகு நேரத்தில் ஒரு பகுதி.

disk array : வட்டு வரிசை : ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக்