பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk back

454

disk copy


காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள்.

disk back : வட்டுத் தொகுதி.

disk based : வட்டு அடிப்படை : வட்டுகளைச் சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்துகிற கணினிப் பொறியமைவு. வட்டிலிருந்து தரவுகளை மீட்கிற பயன்பாடு. இது, நினைவுப் பதிப்பி அடிப்படையிலிருந்து மாறுபட்டது.

disk buffer : வட்டின் இடைநிலை நினைவகம் : வட்டில் எழுதப்படாத தரவுவை ஒதுக்கி வைக்க கணினியின் நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி.

disk cache : வட்டுப் பொதியறை : வட்டிலிருந்து தரவுகளைப் படிப் பதற்கான ஒரு இடைநிலை. இது வட்டு அணுகுதலை விரைவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.

disk capacity : வட்டுக் கொள்ளளவு.

disk cartridge : வட்டுப்பொதியுறை : தனியொரு நிலை வட்டினை அல்லது ஒரு செருகு வட்டினைக் கொண்டிருக்கிற அப்புறப்படுத்தத்தக்க வட்டுப் பொதிவுச் சாதனம்.

disk change : EuLG) onOg).

disk change sensor : வட்டு மாற்று உணரி.

disk cleanup : வட்டு செம்மை செய்.

disk, compact : குறுவட்டு.

disk controller : வட்டுக் கட்டுபாட்டுக் கருவி : சைகைகளை மீட்டு, வட்டு இயக்கிக்கு அனுப்புகிற மின்சுற்று வழி. ஒரு சொந்தக் கணினியில், இது ஒரு விரிவாக்கப் பலகை. இது தாய்ப்பலகையிலுள்ள விரிவாக்கப் பள்ளத்தில் பொருந்தச் செய்கிறது. ஒரு வட்டு இயக்கிக்கும் மையச் செயலகத்துக்கும் (CPU) இடையிலான இடைமுகப்பாக உள்ள மின்னணு வியல் சுற்றுநெறி.

disk controller card : வட்டுக் கட்டுப்பாடு அட்டை : வட்டு இயக்கியை கணினியுடனும் அதன் கட்டுப்பாட்டு இயக்கத்துடனும் இணைக்கும் வெளிப் புற மின்சுற்று அட்டை.

disk copy : வட்டுப் படி : ஒரு செருகு வட்டின் உள்ளடக்கங்களை இன்னொரு செருகு வட்டில் படியெடுப்பதற்கான DOS ஆணை. இதில், செருகு வட்டுகள் முழுவதையும் தடவாரியாகப் பயன்படுத்தப்படும்

DOS, OS/2 பயன்பாடு.