பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk jacket

457

disk optimiser


disk jacket : வட்டு மேலணி : காகிதம் அல்லது செயற்கை இழையில் செய்யப்படும் வட்டுக்கான நிரந்தர பாதுகாப்பு முனை. வட்டு இயக்கியில் நுழைக்கும்போது உள்ளிட்ட எந்த சமயத்திலும் மேலணியிலிருந்து வட்டு எப்போதும் நீக்கப்படுவதில்லை.

diskless workstation : வட்டிலா வேலை நிலையம் : ஒர் இணையத் திலுள்ள வட்டுச் சேமிப்பி இல்லாத கணினி. அனைத்துச் செயல் முறைகளும், தரவுகளும் இணைய வட்டிலிருந்து மீட்கப் படுகின்றன.

disk library : வட்டு நூலகம் : சுற்றுப்புறக் கட்டுப்பாட்டு சூழ்நிலைகளில் பாதுகாப்பாக வட்டுத் தொகுதிகளை வைத்திருக்கும் தனி அறை அல்லது வட்டுகளின் கோப்பை வைப்பதற்கான இருப்பக வசதி.

disk, magnetic : காந்த வட்டு.

disk management : வட்டு மேலாண்மை : ஒரு நிலை வட்டினைப் பேணிக் கட்டுப்படுத்துதல், உருவமைவு, படி, தன்மைக்குறி விவரக் குறிப்பேட்டு மேலாண்மை, கூறுபாட்டுத் தடுப்புச் செயற்பணிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இது குறிக்கிறது. ஒரு வட்டில் தரவுகளைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அமைப்பாக்கக் கட்டமைவு.

disk memory : வட்டு நினைவகம் : சுழலும் வட்டுகளை தற்காலிக நினைவகமாக பயன்படுத்தும் சேமிப்பகம்.

disk mirroring : வட்டுப் பிரதிபலிப்பு : தவறுகை தாங்கும் செயற் பாட்டிற்காகத் தேவைக்கு அதிகமாகவுள்ள தரவுகளைப் பதிவு செய்தல், தரவுகள் ஒரே வட்டில் இரு பகுதிகளில் அல்லது ஒரே பொறியமைவில் இரு தனித்தனி வட்டுகளில் இரு தனித்தனிக் கணினிப் பொறியமைவுகளில் எழுதப்படுகின்றன.

disk operating system : வட்டு இயக்க முறைமை : நிரலாக்கத் தொடர் களை மின்காந்த வட்டுகளில் சேமித்து வைக்கும் இயக்க அமைப்பு. கோப்புகளின் இருப்பிடத்தை அறிதல், கோப்புகளைச் சேமித்துத் திரும்ப எடுத்தல், சேமிப்பகத்தை ஒதுக்குதல், வட்டு சேமிப்பு தொடர்பான பிற கட்டுப்பாட்டுப் பணிகளை இந்த அமைப்பு செய்வது வழக்கம்.

disk optimiser : வட்டுச் சிக்கனம் : தரவு கோப்புகள் சிதறுவதைக் கண்காணிக்கும் ஒரு பயனிட்டுச்