பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

displacement

460

display device


பீட்டு வடிவங்களைக் கண்டறிவதற்கு மாற்றுவழிகள் உள்ளன.

displacement : இடமாற்றல் : அடிப்படை முகவரிக்கும் உண்மையான எந்திர மொழி முகவரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு.

display : காட்சி;காட்சியகம்;ஒளி எழுத்து கண்காட்சி : 1. திரையிலோ அல்லது காட்சியிலோ தரவுகளைக் குறிப்பிடல், 2. கணினி முகப்பில் உள்ள ஒளி அல்லது குறிப்பிகள். 3. வரைகலை தரவுகளை வெளியீட்டுச் சாதனத்தில் காட்சியாக உருவாக்கும் செயல்.

display adapter : காட்சி ஏற்பி;காட்சி அமைப்பு அட்டை : கணினியை ஒரு காட்சித் திரையுடன் மின்னணு முறையில் இணைக்கும் ஏற்பி அட்டை. கணினித் திரையின் அளவு, நிறம் மற்றும் வரைகலை உண்டா இல்லையா என்பது போன்ற திறன்களை இது முடிவு செய்யும்.

display background : காட்சிப் பின்னணி;காட்சிப் பின்புலம் : செயலாக்கம் செய்வதன் பகுதியாக இல்லாத, பயன்படுத்து வோரால் மாற்ற முடியாத வரைகலை தரவுகளில் திரையில் காட்டப்படும் பகுதி. காட்சி முன்னணி எனப்படும் காட்சியில் தோன்றும் தோற்றத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது.

display card : காட்சியட்டை.

display composition : காட்சியக இணைப்பாக்கம் : மேசை மோட்டு வெளியீட்டில், திண்மையாகவும், அலங்காரமாகவும் மாறுபட்ட எழுத்து முகப்புகளாகவும் உள்ள எழுத்துருக்களைக்கொண்ட வரிகள். இது கவனத்தை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

display console : காட்சி முகப்பு;காட்சி முனையம் : காட்சித் திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது.

display control : காட்கிக் கட்டுப்பாடு.

display cycle : காட்சி சுழற்சி;காட்சிச் சுழல் : புலனாகும் காட்சித்திரை மீண்டும் புதிதாக மாற எடுக்கும் நேரம்.

display device : காட்சிச் சாதனம் : வரைகலை அச்சுப்பொறி, இலக்க

முறை பலகை, ஒளிக்காட்சி முகப்பு போன்ற பார்க்கக்கூடிய வகையில் தரவுகளை உருவாக்கும் திறனுடைய சாதனம.