பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

display element

461

display menu


display element : காட்சியகக் கூறு : வரைகலையில், பின்புலம், முன்புலம், வாசகம், வரைகலை உருக்காட்சி போன்ற அடிப்படை வரை கலை அமைப்பிகள். கணினி வரைகலையில் ஒர் உருக்காட்சியின் ஒர் அமைப்பி.

display entity : காட்சி அலகு : கணினி வரைகலையில் ஒளிக்காட்சிக் கூறுகளின் ஒரு தொகுதி. இதனை ஒர் அலகாகக் கொள்ளலாம்.

display face : காட்சி முகப்பு : ஓர் ஆவணத்தில் தலைப்புகள், பெயர்கள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான எழுத்து முகப்பு. பக்கத்திலுள்ள மற்ற வாசக எழுத்துகளிலிருந்து இது தனித்து முனைப்பாகத் தோன்றுகிறது.

display foreground : காட்சி முன்புலம் : பயனாளரால் மாற்றக்கூடிய காட்சிச் சாதனத்தில் காட்டப்படும் வரைகலை தரவுகளின் பகுதி.

display frame : காட்சிச் சட்டகம் : கணினி வரைகலையில் ஒரு தொடர்ச்சியான துண்டுதல் சட்டகங்களிலுள்ள ஒரு தனிச்சட்டகம்.

display highlighting : காட்சி அதிகரித்தல்;காட்சி சிறப்புறல் : மினுக்குதல், பெரிய எழுத்து, அதிகக் கருமை, தலைகீழ் ஒளி, அடிக்கோடிடல் மாறுபட்ட நிறங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி காட்சித்திரையில் தரவுவை முக்கியப்படுத்தும் வழி.

display image : காட்சி உருவம்;காட்சிப் படிமம் : 'காட்சிச் சாதனத்தில் அப்போது தெரியும் வரைகலை கோப்பின் காட்டப்பட்ட பகுதி.

display list : காட்சியகப் பட்டியல் : கணினி வரைகலையில், அளவுரு வரைகலை உருவமைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒர் உருக்காட் சியை உருவாக்குகிற அளவுருக்களின் தொகுதி.

display list processor : காட்கியக பட்டியல் செய்முறைப்படுத்தி : கணினி வரைகலையில், கோடுகள், வட்டங்கள் போன்றவற்றை வரைதல் போன்ற வரைகலை வடிவ கணித உருவங்களை, ஒளிக்காட்சிப் பட்டியலிலிருந்து மையச் செயலகத்தை (CPU) உருவாக்குகிற ஒர் எந்திரம்.

display memory : காட்சி நினைவகம்.

display menu : காட்சி வகைப் பட்டியல் : செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைத் தொடரின் அடுத்த செயலை முடிவு