பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

display port

462

display tolerence


செய்யப் பயனாளருக்கு வாய்ப்பு அளிக்கும் நிரல் தொடரில் உள்ள, திரையில் தெரியும் வாய்ப்புகள். காட்சித் திரையில் தெரிவதை அச்சிடு வது, வரைகலை காட்சியை வட்டில் சேமிப்பது போன்றவை வாய்ப்புகளில் சில.

display port : திரைக்காட்சித் துறை : கணினியிலுள்ள வெளியீட்டுத் துறை. காட்சித்திரை போன்ற வெளியீட்டுச் சாதனத்துக்குரிய சமிக்கைகளை இத்துறையின் வழியாகப் பெறலாம்.

Display PostScript (DPS) : காட்சிப் பின்குறிப்பு (டிபிஎஸ்) : ஆடோப் கழகம் தயாரித்துள்ள ஒரு காட்சியக மொழி. இது, ஒரு பயன்பாட்டுச் செயல் முறையிலுள்ள அடிப்படை நிரல்களை திரையில் வரைகலை உருவங் களாகவும், வாசகங்களாகவும் காட்டுகிறது. பின்குறிப்பு அச்சடிப்பு மொழி யின் திரை வடிவம்.

display postscript screen : காட்சியகப் பின்குறிப்புத் திரை : பின் குறிப்பு அச்சடிப்பி மொழியின் மறுபடிவம். இது, ஒரு பயன் பாட்டில் அடிப்படை நிரல்களை, திரையில் வரைகலை உருவங்களாகவும் வாசகங்களாகவும் மாற்றிக் காட்டுகிறது. இது, ஒரு செந்திறமான, சாதனச் சார்பிலாத காட்சி மொழியை அளிப்பதற்கு ஒரு செயற்பாட்டுப் பொறியமைவில் சேர்க்க வடிவமைக்கப்படுகிறது.

display processor : காட்சிச் செய்முறைப்படுத்தி : ஒரு கோப்பின் உள்ளடக்கங்களை கணினித்திரை (Monitor) போன்ற ஒரு சாதனத்தில் காட்சியாகக் காட்டுகிற செயற்பாட்டுக்கான ஒரு செய்முறைப்படுத்தி,

display screen : காட்சித் திரை : மனிதர் பார்ப்பதற்காக வாசகங் களையும், வரைகலை உருவங்களையும் காட்டுவதற்கான ஒரு பரப்பு. இது, எதிர் மின்கதிர்க் குழல் அல்லது பட்டைச் சேணத் தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பது.

display surface : காட்சி மேற்பரப்பு : புலனாகும் காட்சித் திரை, அச்சுக் காகிதம், பலகைக் காகிதம் அல்லது திரைப்படம் போன்ற தரவுகளைக் காட்டக்கூடிய சாதனம்.

display terminal : காட்சி முகப்பு;காட்சி முனையம் : வரைகலை தரவுகளைப் பார்க்கக்கூடிய வகையில் வெளியிடும் திறனுள்ள ஒரு வெளியீட்டுச் சாதனம்.

display tolerence : காட்சி சகிப்பு;காட்சிப் பொறுதி : எவ்வளவு