பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

distributed database

464

distributed intelligence


தளம் : ஒரு கட்டமைப்பில் கணினி அமைப்புகளின் மூலமாக பரவ லாக்கப்பட்ட தரவுத் தளம்.

distributed database management system : பகிர்ந்தமை தரவுத் தள மேலாண்மை முறைமை : பகிர்ந்தமை தரவுத்தளங்களைக் கையாளும் திறன்பெற்ற ஒரு தரவுத்தள மேலாண்மை முறைமை.

distributed data processing : பகிர்மான தரவுச் செயலாக்கம் : கணினி அமைப்பில் இயக்கங்களைச் செய்யும் கொள்கைகளில் ஒன்று. அதன்படி மையச் செயலக அலகுகளும், முகப்புகளும் பல்வேறு இடங்களில் பிரிந் திருந்தாலும் அவை தரவுத் தொடர்பு கட்டமைப்புகளின் மூலம் செயல் பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.

distributed design : பகிர்மான வடிவமைப்பு;பரவிய வடிவமைப்பு : தனிப்பட்ட இயக்கும் அலகுகள் இருப்பதை அடையாளம காணுவதுடன. மைய ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டின் பலன்களையும் ஏற்கும் தரவு அமைப்பு.

distributed file system : பகிர்மானக் கோப்பு முறை : பன்முக இணை யங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளின் தடம்பற்றிச் செல்லும் மென்பொருள். கோப்புகள், அமைவிடத்தைப் பொறுத்து அல்லாமல், அவற்றின் பெயரால் அடையாளங் காணப்படுகின்றன.

distributed function : பகிர்மானச் செயற்பணி : அமைவனம் முழு வதிலும் செய்முறைப்படுத்தும் பணிகளைச் செய்தல்.

distributed information processing system : பகிர்மான தரவு செயலாக்க அமைப்பு : பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தரவுத் தளங்கள் அல்லது எதிர்வினை ஆற்றும் கணினி அமைவுகளின் தொகுதி.

distributed intelligence : பகிர்மான அறிவுத் திறன் : முனையங் களிலும், பிற புறநிலைச் சாதனங்களிலும் செய்முறைப் படுத்தும் திறம்பாட்டினை அமைத்தல். திரை உருவமைவு, தரவுப் பதிவுச் செயல்மானம், பிற செய்முறைப்படுத்துதலுக்கு முந்திய நடவடிக்கைகளை அறிவுத் திறன் முனையங்கள் கையாள்கின்றன. வட்டு இயக்கிகள், பிற புறநிலைச் சாதனங்களில் அமைக்கப்படும் அறிவுத்திறன். மையக் கணினியை வாலாயப் பணிகளிலிருந்து விடுவிக்கிறது.