பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

division check

467

DNC


division check : வகுத்தல் சரி பார்ப்பு;பரிவு சோதனை : ஆரம்ப வகுத்தலுடன் சுழி (பூஜ்யம்) யை சமநிலைப்படுத்துவதைச் சோதிக்கும் பெருக்கல் சோதனை.

division, identification : இனங்காண் பிரிவு.கோபால் மொழி நிரலின் ஒரு பகுதி.

divisor : வகுப்பி;வகு எண்.

. dj : . டிஜே : இணையத்தில், ஒர் இணைய தளம் டிஜிபவுட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

. dk : . டிகே : இணையத்தில், ஒர் இணைய தளம் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

DLC : டிஎல்சி : தரவு தொடர்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Data Link Control என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத் தில் பருநிலையில் இணைக்கப்பட்ட இரண்டு கணுக் கணினிகளிடையே நடைபெறும் தரவு பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைச் சரி செய்யும் நெறிமுறை. எஸ்என்ஏ (SNA-Systems Network Architecture) அமைப்பில் பயன் படுத்தப்படுகிறது.

. dll : . டிஎல்எல் : விண்டோஸ் இயக்கமுறையில் படுத்தப்படும் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயங்குநிலை தொடுப்பு நூலகக் கோப்பு என்று பொருள்படும் Dynamic Link Library என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

DMA : டிஎம்ஏ : Direct Memory Access என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர். இதற்கு நேரடி நினைவக அணுகல் என்பது பொருளாகும்.

DML : டிஎம்எல் : Data Manipulation language என்பதன் குறும்பெயர். தரவு கையாளும் மொழி.

DΜΤF : டிஎம்டிஎஃப் : மேசைக் கணினி மேலாண்மைப் முனைப்புக் குழு என்று பொருள்படும் Desktop Management Task Force என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயனாளர் மற்றும் தொழில் துறைத் தேவைகளுக் காக பீசி அடிப்படையிலான தன்னந்தனிக் கணினி மற்றும் பிணைய அமைப்புகளுக்கான தர வரையறைகளை உருவாக்குவதற்கென 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டமைப்பு.

DNC : டிஎன்சி : Direct Numerical Control என்பதன் குறும்பெயர்.