பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 active channel

46

active matrix display


active channel : இயங்கு தடம் : செயற்படு அலை வரிசை

active class : இயங்கு இனகுழு

active configuration : இயங்கு அமைவடிவு செயல்படு தக தகவமைப்பு.

active content : இயங்கும் உள்ளடக்கம் : மாறும் உள்ளடக்கம் நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் நடவடிக்கை காரணமாகவோ, தளவலைப்பக்கத்தின் மாறுகின்ற உள்ளடக்கம். இணையத்தில் திரையில் தோன்றும் ஒரு வலைப் பக்கத்தில் காணப்படும் படங்கள், எழுத்துகள், விளம்பரப் பட்டைகள் இவற்றை, நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் தலையீட்டின் அடிப்படையிலோ (கட்டியில் சொடுக்குவதன்மூலமோ) மாற்றியமைக்க முடியும். இத்தகைய மாறும் உள்ளடக்கம், ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாட்டு விசைகள் மூலம் இயல்கிறது.

active database : இயங்கு தகவல் தளம்; இயங்கு தரவுத் தளம்.

active data dictionary : இயங்கு தரவு அகராதி ஒரு நிறுவனத்தின் தரவுத் தளத்தை அணுகுவதற்கு டிபிஎம் எஸ்ஸை பயன்படுத்துபவர்கள் மற்றும் பயன்பாட்டு நிரல் தொடர்கள் அணுகும்போது, தரவு பொருள் வரையறைகளை தானாகவே செயற்படுத்தும் தரவு அகராதி.

active decomposition படு சிதைவு.

active decomposition diagram இயங்கு சிதைவு வரைபடம்.

active device : இயங்கு உறுப்பு : இயங்கு பகுதி இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித் திரையில் ஒரு பகுதி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவாக, திரையில் தோன்றும் கட்டுக்குறி (Cursor) அல்லது தேர்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, கணினித் திரையில் இயங்கும் உறுப்பினை காட்டும்.

active element : செயற்படு உறுப்பு : இயங்கு உறுப்பு.

active file : நடப்பு கோப்பு : பயன்படும் கோப்பு : தற்பொழுது பயன்படுத்தப்படும் கோப்பு.

active index : செயற்படும் சுட்டு

active links : இயங்கும் இணைப்புகள் : செயற்படு தொடுப்புகள்.

active matrix display : இயங்கு அணி காட்சி.