பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

document processing

472

document style


வரைகலை தரவுகளை உருவாக்குதல், பராமரித்தலுக்காக தரவு செயலாக்க முறைகளைப் பயன்படுத்தும் வடிவமைக்கப்பட்ட நிரலாக்கத் தொடர்.

document processing : ஆவணச் செய்முறைப்படுத்துதல் : சொல் பகுப்பியில் செய்வது போன்று, வாசக ஆவணங்களைச் செய் முறைப் படுத்துதல். ஆவண உள்ளடக்கம் அடிப்படையிலான வாசக மீட்புக்கான அட்ட வணைப்படுத்தும் முறைகளையும் உள்ளடக்கும்.

document reader : ஆவணப் படிப்புப் பொறி;ஒரு குறிப்பிட்ட அளவு தரவைப் படிக்கும் ஒசிஆர் அல்லது ஒஎம்ஆர் கருவி.

document restore button : ஆவண மீட்டாக்கப் பொத்தான்.

document retrieval : ஆவணம் திரும்பப் பெறல் : சேமிப்புச் சாதனங் களிலிருந்து தரவுகளைப் பெறும் செயல்முறை. தரவுகளைக் கையாளுதல் மற்றும் பின்னர் அறிக்கை தயாரித்தலும் இதில் அடங்கும்.

document routing : ஆவணம் திசைவித்தல்.

document Scanner : ஆவண வருடு பொறி.

document source : ஆவண மூலம் : வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். <HTML>, <HTML>, , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்கப் படுகின்றன. ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப் பட்ட உரைக் கோப்பினை ஒர் இணைய உலாவியில் (Browser) பார்வையிடும்போது அழகான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும். ஹெச்டிஎம்எல் மூல உரைக்கோப்பு, ஆவணமூலம் எனப்படுகிறது. இணையத்தில் (வைய விரிவலையில்) பார்வையிடுகின்ற மீவுரை (Hyper Text) ஆவணங்களின் மூல வரைவினை (Source Code) அதாவது ஆவண மூலத்தைப் பார்வை யிட உலாவியிலேயே வசதி உண்டு. document style semantics and specification language : ஆவண பாணி தொடரிலக்கணம் மற்றும் வரையறுப்பு மொழி : உருவாகிக் கொண்டி ருக்கும் ஐஎஸ்ஓ தர வரையறை. ஒரு குறிப்பிட் வடிவாக்கம் அல்லது செயலாக்கம் சாராத ஒர் ஆவணத்தின்