பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dot addressable

476

dot matrix


பிரிக்கும் குறியீடு.(எ-டு)text.doc.இதனை டெக்ஸ்-டாட்-டாக் என்று வாசிக்க வேண்டும். 2.கணினி வரைகலையிலும் அச்சடிப்பிலும் புள்ளிகள் தாம் ஒரு படத்தையோ எழுத்தையோ உருவாக்குகின்றன. கணினித் திரையில் காணப்படும் உருவப்படங்கள் புள்ளிகளால் ஆனவையே அவை படப்புளிளிகள்(pixels-picture elements)எனப்படுகின்றன. அச்சுப்பொறியின் திறன் ஒர் அங்குலத்தில் எத்தனைப் புள்ளிகள்(dots per inch-dpi)என்று குறிக்கப்படுகிறது. 3. இணைய தள முகவரியின் வெவ்வேறு பகுதிகளை புள்ளிகளே பிரிக்கின்றன (எ-டு) www.vsnl.com.

dot addressable:புள்ளி முகவரியாக்கம்:தனித்தனிப் புள்ளி ஒவ் வொன்றையும்,ஒரு ஒளிப் பேழைக் காட்சியில்,புள்ளிக் குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பியில் அல்லது லேசர் அச்சடிப்பியில் செயல்முறைப்படுத்தும் திறம்பாடு.

dot Chart:புள்ளிக்குறி வரைபடம்:சிதறல் வரைபடம் போன்றது.

dot commands:புள்ளி ஆணைகள்:புள்ளிக் கட்டளைகள்:வடிவமைப்பு நிரல்களை அளித்து சொல் பகுப்பியில் பதிவேடுகளை தயார் செய்தல். அச்சிடும் போதுதான் அந்த ஆணைகள் செயல்படுத்தப்படும். வேர்டு ஸ்டார் தொகுப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

dot file:புள்ளிக் கோப்பு:யூனிக்ஸ் இயக்க முறைமையில் புள்ளியில் தொடங்கும் பெயரைக் கொண்ட கோப்பு. (எ-டு)profile ஒரு கோப்பகத் திலுள்ள கோப்புகளின் பட்டிபலைத் திரையிடும்போது,புள்ளிக் கோப்புகள் இடம் பெறா. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கான நிரல்களின் நிலைபாடுகளை இருத்தி வைக்கப் பயன்படுகின்றன.

dot gain:புள்ளிக்குறி ஈட்டம்:ஒவ்வொரு மைப் புள்ளிக்குறியின் வடிவளவும்,வெப்பநிலை,மை,காகிதத்தின் தரம் காரணமாக பெருக்க மடைதல்.

dot graphic:புள்ளிக்குறி வரைகலை: புள்ளிக்குறிகளின் உரு வகைகளினால் உருவாக்கப் பட்ட ஒரு வரைகலை வடிவமைப்பு.

dot matrix:புள்ளி அச்சு முறை;புள்ளி அணி;புள்ளி அச்சு எந்திரம்;குத்துசி அச்சு எந்திரம்:எழுத்துகளைக் குறிப்பிட புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து