பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

double buffering

478

double dereference


double buffering : இரட்டை இடைநிலைத் தாங்குதல்;இரட்டை இடைநிலை வைப்பக முறை : கணினிக்கும் வெளிப்புறச் சாதனங் களுக்கும் இடையில் தரவுவை மாற்றுவதற்கான வன்பொருள் அல்லது மென்பொருள் தொழில்நுட்பம். ஒரு தாங்கியில் உள்ள தரவுவை கணினி செயலாக்கம் செய்யும் போது, அடுத்த ஒன்று, தரவுவை வெளியே அனுப்பும் அல்லது உள்ளே வாங்கும்.

double-click : இரட்டை கிளிக்கி;இரட்டை அமுக்க முறை : சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்தினால் நிரல் செலுத்தப்படும்.

double-dabble : இரட்டை மாற்று முறை : ஈரிலக்க எண்களை அவற்றுக்கு நிகரான பதின்ம எண்களாக மாற்றுகிற ஒரு படி நிலை முறை.

double density : இரட்டை அடர்த்தி : வழக்கமான வட்டு அல்லது நாடாவின் சேமிப்புத் திறனைப்போல் இரண்டு மடங்கு திறன் உடையதாக இருருத்தல். தனி அடர்த்தி வட்டு அல்லது நாடாவில் உள்ளது போன்ற இரண்டு மடங்கு சேமிக்கும் திறன்.

double density disk : இரட்டை அடர்த்தி வட்டு;இரட்டைச் செறிவு வட்டு; இரட்டைக் கொள்திறன் வட்டு : முந்தைய வட்டுகளைப்போல் இரண்டு மடங்கு கொள்திறன் (ஒர் அங்குலப் பரப்பில் கொள்ளும் துண்மிகள்) உள்ள வட்டுகள். முற்கால ஐபிஎம் பீசியில் பயன்படுத்தப்பட்ட நெகிழ்வட்டுகளின் கொள்திறன் 180 கே. பி. இரட்டைக் கொள்திறன் வட்டுகளில் 360 கேபி தகவலைப் பதியலாம். இவ்வட்டுகள் தரவைப் பதிய, திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறியீட்டுமுறை பயன்படுத்தப் பட்டது.

double dereference : இரட்டைச் சுட்டுவிலக்கம் : p என்பது a என்னும் மாறிலியின் முகவரியைக் குறிக்கும் சுட்டு (Pointer) எனில், *P என்பது a-யில் இருத்தி வைக்கப்பட்ட மதிப்பினை நேரடியாகச் சுட்டும். இதில் * என்னும் அடையாளம் சுட்டு விலக்கக் குறியீடாகப் பயன்படுகிறது.

q என்பது p-யைச் சுட்டும் சுட்டு எனில், *q என்பது p-யின் மதிப்பைச்