பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

down loading

481

downward compatible


down loading : தரவிறக்கம் : ஒரு பெரிய கணினியிலிருந்து ஒரு சிறிய கணினிக்குத் தரவுகளை மாற்றும் செய்முறை. எடுத்துக்காட்டு : முதன்மைப் பொறியமைவிலிருந்து ஒரு சொந்தக் கணினிக்கு மாற்றம் செய்தல். ஒரு சொந்தக் கணினியிலிருந்து ஒரு சாதனத்திற்குத் தரவுகளை மாற்றுவதையும் இது குறிக்கும். எடுத்துக்காட்டு : லேசர் அச்சடிப்பிக்கு மாற்றம் செய்தல். தரவுவிறக்கம் என்பது கணினியின் வடிவளவினைக் குறிப்பதில்லை. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குத் தரவுகளை மாற்றுவதையே குறிக்கும்.'தரவுவேற்றம்' (uploading) என்பது இதற்கு எதிர் மாறானது.

downsizing : சிறிதாக்கம் : ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணினி (mainframe) சிறு கணினி (mini), போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro) அமைப்புக்கு மாற்றியமைத்தல். பெரும்பாலும் இம்மாற்றம் செலவைக் குறைக்க, அல்லது புதிய மென்பொருளுக்கு மாறுவதற்காக இருக்கலாம். சிறிய கணினி அமைப்பு என்பது பீசிக்கள், பணி நிலையங்கள் இணைந்த கிளையன் (client) வழங்கன் (server) அமைப்பாக இருக்கலாம். ஒன்று அல்லது சில குறும் பரப்பு/விரிபரப்புப் பிணையங்கள் இணைக்கப்பட்ட பெருமுகக் கணினியாகவும் இருக்கலாம்.

downstream : கீழ் தாரை;கீழ் ஒழுக்கு;கீழ்பாய்வு : ஒரு செய்திக் குழுவுக்கான செய்தி, ஒரு செய்தி வழங்கனிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும் திசை வழியைக் குறிக்கிறது.

down time : முடக்க நேரம்;செயல்படா நேரம் : ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள், இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக்காடு எதிர்பாராவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம். அல்லது திட்டமிட்டுப் பராமரிப்புக்காக செயல்படாமல் நிறுத்தி வைத்த நேரமாகவும் இருக்கலாம்.

downward compatible : சூழ்நிலைப் பொருத்தமுடைய : முந்தைய தலை

முறையைச் சேர்ந்த அல்லது சிறிய கணினியுடன் ஏற்புடைய கணினி பற்றியது.