பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DPMA

482

draft quality


DΡΜ : டிபீஎம்ஏ : Data processing Management Association என்பதன் குறும்பெயர்.

DPMA certification : டிபீஎம்ஏ சான்றிதழ் : ஒருவர் தரவு செயலாக்கத் துறையில் குறிப்பிட்ட அளவு திறனை அடைந்து விட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் தரவுச் செயலாக்க மேலாண்மைச் சங்கம் (DPMA) முன்பு அளித்துவந்த சான்றிதழ். ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்போது ஐ. சி. சி. பி (Institute for Certification of Computer Professionals) இந்தச் சான்றிதழை வழங்குகிறது.

DPMI : டிபீஎம்ஐ : பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் இடைமுகம். 80286 மற்றும் அதனினும் கூடுதல் திறன் நுண்செயலிகளில் எம்எஸ்-டாஸ் அடிப்படையி லான பயன்பாட்டு நிரல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல்பட உதவும் மென்பொருளாகும் இது. பாதுகாக்கப்பட்ட செயல்முறையில் நுண்செயலி பல்பணிகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும். சாதாரணமாக எம்எஸ் டாஸில் செயல்படும் நிரல்களுக்கு எம்பி நினைவகம் மட்டுமே கிடைக்கும் ஆனால் பாதுகாக்கப்பட்ட செய்முறையின் போது 1எம்பிக்குக் கூடுதலான நினைவகப் பரப்பையும் பயன் படுத்திக் கொள்ள முடியும்.

DPMS : டிபீஎம்எஸ் : திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் (Display Power Management Signaling) என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்வு அல்லது இடைநிறுத்த நிலையில் இருக்கும். அப்போது மிகக்குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். வேஸா (VESA) நிறுவனத்தின் தர வரையறையாகும் இது.

draft : வரைவு நகல்.

draft mode : நகல் பாங்கு : பெரும்பாலான புள்ளியணி அச்சுப் பொறிகளில் இருக்கின்ற குறைந்த தரமுடைய அதிவேக அச்சுக்கான அச்சுமுறை.

draft quality : வரைவு தரம் : அச்சிடப்பட்ட வெளியீடுகளின்