பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

driver manager

486

drop down menu


தொடர்புத் தடத்தில் அனுப்பப்படும் சமிக்கைகளை திறன் மிகுத்துத் தரும். விசைப்பலகையிலுள்ள விசைகள் இன்ன விதமாக இயங்க வேண்டும் என் பதை அதற்குரிய இயக்கி நிரலே தீர்மானிக்கிறது. அதனை விசைப்பலகை இயக்கி (keyboard driver) என்று அழைக்கிறோம். இதுபோல அச்சுப் பொறியை வழிநடத்த இயக்கி உள்ளது. கணினி, அதனுடன் இணைக்கப்பட்ட புறச் சாதனங்களோடு ஒத்திசைவுடன் செயல் பட உதவும் இயக்கிகள் சாதன இயக்கிகள் (Device Drivers) எனப்படுகின்றன.

driver manager : இயக்கி மேலாளர்.

drive specifier : இயக்கி குறியீடு : ஒரு வட்டு இயக்கியை A, B போன்ற வடிவில் பெயர் கட்டுகிறது. ஒர் இரு எண்மி (எட்டியல்) நெறியம்.

drive Z : இயக்கி-Z : ஒரு IBM அல்லது IBM இசைவுடைய சொந்தக் கணினியின் மீதான கடைசித் தருக்கமுறை நிலை வட்டு இயக்கி வடிவமைப்பி. கோட்பாட்டு முறையில், ஒரு சொந்தக் கணினியில் அல்லது சொந்த இசைவுக் கணினியில், A முதல் Z வரையிலான 26 செருகு மற்றும் நிலை வட்டுகளைக் கொள்ளலாம்.

driving chains : இயக்கு சங்கிலி.

DRO : டிஆர்ஓ : Destructive Read 0ut என்பதன் குறும்பெயர்.

droid : மனித எந்திரம்;எந்திரன் : மனிதரைப் போன்ற தோற்றமுள்ள எந்திர மனிதன், ராய்டு ஆண் அல்லது கைனாய்டு பெண் உருவாக்கப்படுதல்.

drop : தொங்கட்டம்;இணைப்பு முனை : ஒர் இணையத்தில் ஒரு சேய்மை முனைய அமைவிடம். ஒரு கணினி காகிதத்தின் உச்சிக்கும் அடிக்குமிடையிலுள்ள தொலைவு. இது மில்லி மீட்டரில் அல்லது அங்குலத் தில் அளவிடப்படுகிறது.

drop cap : தொங்கல் முகடு : அச்செழுத்துருவாக்கக் கலையில், முதல் வரிக்குக் கீழே தொங்கிநிற்கும் ஒரு பெரிய முதலெழுத்து.

drop dead halt : மீளா நிலை;உயிரற்ற நிறுத்தம் விழுதல் : மீண்டும் சரி செய்ய முடியாதவாறு நிறுத்தப்படுதல்.

drop down menu : கீழ்தொங்குப் பட்டியல் : நிரந்தரமாக திரையில் தெரிந்து கொண்டிராத ஒரு பட்டியல், ஒர் உயர்நிலைப் பட்டியல் தூண்டப்படும்போது மட்டுமே ஒரு கீழ் தொங்கு பட்டியல் தோன்றுகிறது.