பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drop in

487

drum


drop in : உரு பிழையுரு : ஒன்று அல்லது மேற்பட்ட துண்மிகளை வட்டு இயக்கி அல்லது நாடா இயக்கி, தவறாகச் சேமித்தல் அல்லது படித்தலின் விளைவாக, ஒரு கோப்பில் அல்லது ஒரு அச்சுவெளியீட்டில் அல்லது ஒரு காட்சித்திரையில் தோன்றும் பிழையான எழுத்துகள்.

droplet : டிராப்லெட் : 1. குவார்க் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி. ஃபைண்டரிலிருந்து கோப்புகளை இழுத்து வந்து ஆவணத்தின் ஒரு பக்கத்தில் இணைத்துவிட முடியும். 2. ஃபிரன்டியர் (Frontier) தொகுப்பில் உள்ள வசதி. ஒரு பயன்பாட்டினுள்ளே கட்டளை வரி களை உள்ளிணைத்து, அப்பயன் பாட்டினை இரட்டைக் கிளிக் செய்யும்போது, கட்டளை வரிகள் இயங்குமாறு செய்ய முடியும். 3. ஒரு கோப்பினை இழுத்து வந்து போடுவதற்கு அனுமதிக்கிற எந்தவொரு ஆப்பிள் ஸ்கிரிப்ட் நிரலும் இப்பெய ராலேயே அழைக்கப்படுகிறது.

drop out : விடுபிழையுரு : 1. தரவு அனுப்புவதில், சமிக்கை திடீரென்று காணாமல் போதல். இரைச்சல் அல்லது அமைப்பில் செயற்கோளாறு ஏற்படுவதன் காரணமாகவே இது ஏற்படுகிறது. 2. ஒன்று அல்லது மேற் பட்ட துண்மிகளை வட்டு இயக்கி அல்லது நாடா இயக்கி தவறாகப் படித்து அல்லது சேமித்ததன் விளைவாக, காட்சித்திரையில் அச்சு வெளியீடு அல்லது கோப்பில் இருந்து மறைந்துபோகும் எழுத்து.

drop shadow : தொங்கல் நிழல்.ஒர் உருக்காட்சிக்குப் பின்புறம், கிடைமட்டத்தில் சற்றே பக்கவாட்டிலும், செங்குத்தாகவும் விழும்படி செய்யப் பட்டுள்ள ஒரு நிழல். இது, உச்சியிலுள்ள உருக்காட்சியானது பக்கத்தின் மேற்பரப்பிலிருந்து உயர்த்தப்பட்டிருப்பது போன்ற முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

dross : பயனற்ற வரி : மோசமான செயல்முறைப்படுத்துதல்/உத்தி அல்லது அடிக்கடி செய்த மாற்றமைவுகள் காரணமாக ஒரு செயல் முறையில் விட்டு விடப்பட்டுள்ள தேவைக்கு மிகையான குறியீட்டு வரிகள்.

drouple : தொழில் முனைவர் : செயல் முறையாளர்கள், தரவு செய்முறைப்படுத்தும் தொழில் முறையாளர்களின் மத்தியில் நேரங்கழிக்க விரும்பும் ஆள்.

drum : உருளை : 1. தொடக்ககாலப் பெருமுகக் கணினிகளில்