பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drum, magnetic

488

dry run


தரவுகளைச் சேமித்து வைக்கும் காந்த ஊடகமாகப் பயன்பட்டது. 2. சில அச்சுப்பொறிகளிலும், வரைவு பொறிகளிலும் (Plotter) பயன்படுத்தப்படும் சுழலும் உருளை. 3. லேசர் அச்சுப்பொறியில் ஒளிமின் பொருள் பூசப்பட்ட சுழலும் உருளை பயன்படுகிறது. லேசர் கதிர்கள் ஒளிமின் பூச்சின்மீது தாக்கும்போது, அந்த இடம் மின்னுட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. உருளையின்மீது மின்னூட்டம் பெற்ற பகுதிகள், மைப்பொடித் துகள்களை ஈர்க்கின்றன. பின் உட்செலுத்தப் படும் தாளின்மீது அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன.

drum, magnetic : காந்த உருளை.

drum plotter : உருளை வரைவி : தானியங்கியாகக் கட்டுப்படுத்தப்படும் பேனாக்களைக் கொண்டு காகிதத்தில் வரை கலைகள், படங்கள், திட்டப் படங்கள் போன்றவற்றை வரைகின்ற வெளியீட்டுச் சாதனம். சிலிண்டர் வடிவ உருளையில் கற்றப்பட்டுள்ள காகிதம் முன்னும், பின்னுமாக மாறுபடும் வேகங்களில் செல்ல, மேல்கீழாக நகரும் பேனாக்கள் காகி தத்தில் படங்களை வரைந்துகொண்டே செல்கின்றன.

drum printer : உருளை அச்சுப்பொறி : அகரவரிசை எண் எழுத்துகளை உடைய உருளையைப் பயன்படுத்தும் அச்சிடும் சாதனம், ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் வரிகள் அச்சிடும் வரி அச்சுப்பொறி.

drum scanner : உருளை வருடு பொறி : வருடுபொறிகளில் ஒரு வகை. வருடப்படவேண்டிய அச்சடித்த தாள் உருளையின்மீது சுற்றப்பட்டுத் தரவு கணினிக்கு அனுப்பப்படுகின்றது.

drum sorting : உருளை பிரிப்பு : பிரிக்கும்போது துணை சேமிப்பகமாக காந்த உருளைகளைப் பயன்படுத்தும் பிரிக்கும் நிரலாக்கத்தொடர்.

drum storage : உருளைச் சேமிப்பகம்.

. drv : . டிஆர்வி : இயக்கிக்கோப்புகளின் வகைப்பெயர்..

dry plasma etching : உலர் பிளாஸ்மா செதுக்கல்;உலர் மின்மப் பொறிப்பு : ஒரு மென் தகட்டின் மீது மேற்பகுதியை ஏற்படுத்துதல்.

dry run : உலர் ஒட்டம் : எழுதப் நிரல்களிலிருந்து நிரலாக்கத் தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலை யிலும் முடிவைச் சோதித்துப்