பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dry running

489

DTV


பதிவு செய்தல். கணினியில் நிரலாக்கத் தொடரை செயல் படுத்துவதற்கு முன் செய்யப்படும், நிரலாக்கத் தொடர் சோதிக்கும் தொழில் நுட்பம்.

dry running : உலர் ஓட்டம்;வெள்ளோட்டம்.

DSA : டிஎஸ்ஏ : கோப்பக முறைமை முகவர் அல்லது கோப்பக வழங்கன் முகவர் என்று பொருள்படும் Directory System Agent/Directory Server Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 வழங்கன்களில் பயன் படுத்தப்படும் ஒருநிரல். டியூஏ (DUA-Directry User Agent) என்னும் கிளையன் நிரல் அனுப்பும் கோரிக்கையின் அடிப்படையில் பிணையத்தில் ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தரும் நிரல்.

DՏԼ : டிஎஸ்எல் : Dynamic Simulation Language என்பதன் குறும்பெயர்.

DSR : டிஎஸ்ஆர் : தரவுத் தொகுதி தயார் என்று பொருள்படும் Data Set Ready என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். தொடர் வரிசைத் தரவுத் தொடர்பில் அனுப்பப்படும் ஒரு சமிக்கை. ஒர் இணக்கி அது இணைக்கப்பட்டுள்ள கணினிக்கு தான் பணியாற்றத் தயாராக இருக்கும் நிலையைத் தெரிவிக்கும் சமிக்கை. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் தடம் 6-ல் அனுப்பப்படும் வன்பொருள் சமிக்கை.

DTE : டிடீஇ : தரவு முனையக் கருவி என்று பொருள்படும் Data Terminal Equipment என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232-சி வன்பொருள் தர வரையறையில், ஒரு வடத்தில் அல்லது ஒரு தரவுத்தொடர்புத் தடத்தில், தகவலை இலக்க முறை வடிவில் அனுப்பத் திறன்வாய்ந்த நுண்கணினி அல்லது முனையம் போன்ற ஒரு சாதனத்தைக் குறிக்கிறது.

DTL : டிடிஎல் : Diode Transistor Logic என்பதன் குறும்பெயர். அரைக்கடத்தி டையோடுகள் மற்றும் மின்மக் கடத்திகளுக்கு இடையிலான நுண் மின்னணு அளவை முறை சார்ந்த இணைப்புகள்.

DTV : டிடீவி : மேசைக் கணினி ஒளிக்காட்சி என்று பொருள்படும் Desk Top Video என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்தில் நிகழ்படக் கலந்துரையாடலுக்காக ஒளிப்படக் கருவியின் பயன்பாட்டைக் குறிக்கிறது.