பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dummy instruction

492

dummy variables


இணைப்புரு;போலி வாத முறை : எந்த மதிப்புகளும் இல்லாத செயல் வாக்குவாதங்களாகப் பயன்படுத்தப்படும் மாறிகள்.

dummy instruction : போலி நிரல்;வெற்று நிரல் : 1. நிரலாகச் செயல்படுத்தப்படுவதைத் தவிர ஒரு நோக்கத்திற்காக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை நிரல் அல்லது முகவரி, 2. ஒரு வழக்க நிரலில் உள்ள நிரல். தானாக அது எதையும் செய்யாது. ஆனால், ஒரு நிரலாக்கத் தொடரினை முடித்து வைப்பதற்கு ஒரு முனையாக அமையும்.

dummy module : வெற்று அடுக்கு;போலி மிச்சவகை (மாடுல்) : உண்மையான செயலாக்கம் இல்லாத நுழைதல் அல்லது வெளியேறுதலைக் கொண்ட மிச்ச வகையின் (மாடுலின்) மாதிரி. கீழ்நிலை, கீழ்ப்பணிகள் ஒருங்கிணைய தயாராக இல்லாத நிலையில் மேலிருந்து கீழாகச் சோதனை செய்வதற்கு இது குறிப்பாகப் பயன்படுகிறது.

dummy routine : வெற்று துணை நிரல்;வெற்று வாலாயம் : இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல் தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும். செயல்பாட்டுப் பகுதி மட்டும் வெற்றாக இருக்கும். (எ-டு) ). Private Sub Command-Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணை நிரல். பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம். மேலிருந்து கீழ் (Top-Down) நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணை நிரல்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, நிரலாக்கம் வளர்ச்சி பெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணை நிரல்களாய் மாற்றியமைப்பர்.

dummy variables : வெற்று மாறியல் மதிப்புருக்கள்;போலி மாறியல் மதிப்புருக்கள் : செயற்பணி வாதவுரைகளுக்கு குறித்தளிக்கப்படும் உறவு நிலைகளை ஏற்படுத்துகிற, DEFFN கட்டளையிலுள்ள மாறியல் மதிப்புருக்கள். ஒரு மாறியல் மதிப்புருவின் பெயராகப் பயன்படுத்த வேண்டிய ஒர் அமை விடத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மாறியல் மதிப்புருவையும் இது குறிக்கும். ஆனால் அந்த மாறியல் மதிப்புருவின் உள்ளடக்கத்தினால் செயல்முறையில் எந்த விளைவும் ஏற்படுவதில்லை.